பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 113 இத்தீர்ப்பினை எடுத்துக் காட்டியதோடு இன்றைய நிலையில் சென்னை உயர்நீதி மன்றத்தீர்ப்பே பின்பற்றத் தக்கதாகும் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்." மேலும் தண்டனை பெற்ற கைதியாகச் சிறையில் இருக்கும் ஒர் உறுப்பினர், சட்டப் பேரவை நிகழ்ச்சிகளில் கலந்து கோள்ளும் உரிமை மட்டும் அல்லாமல் சிறையில் இருந்தவாறே சட்டமன்ற உறுப்பினர் பணிகளை ஆற்றும் உரிமையும் உண்டு என்றும் கூறி. அதற்கான உயர்நீதி மன்றத் தீர்ப்பு ஒன்றையும் எடுத்துக் காட்டியுள்ளார் திருவாளர் எம். என். கவுல் அவர்கள்." - சென்னை உயர்நீதி மன்றத்தின் இத்தீர்ப்பின் விளை வாக, தமிழ்நாடு அரசு, 'சென்னைக் காவல் கைதிகள் விதிகள் 1950இல் காவல் கைதிகளாகச் சிறையில் இருக்கும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தாம் உறுப்பின ராக இருக்கும் அவைத் தலைவருக்கோ, அவைக் குழுவுக்கோ அனுப்பும் அனைத்துக் கடிதங்களையும் உறுப்பினர்களின் அவை உரிமைக்கு என்ற நடவடிக்கை அரசு எடுத்துக் கொள்ள வாய்ப்பு அளிக்கும் வகையில், அரசுக்கு உடனடி யாக அனுப்பி வைக்க வேண்டும் எனச் சிறை அதிகாரி களுக்கு ஆணை பிறப்பிக்கும் பிரிவைச் சேர்த்துச் கொண் டனர்" எனவும் அதே நூலில் கூறியுள்ளார்." சிறையில் தண்டனைக் கைதியாக இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்களுக்கான எந்த உரிமையும் இல்லை என வாதிட, கீழே கொடுக்கப்பட்டுள்ள சென்னை உயர்நீதி மன்ற, உச்சநீதி மன்றத் தீர்ப்புகளைக் காட்டி வாதிடக் கூடும். . இங்கிலாந்து பாராளுமன்றம் தன் உறுப்பினர்களுக்கு, தடுப்புக்காவலுக்கு எதிராகவோ, அன்றி சட்டமன்ற அதிகாரத்தின்படி அளிக்கப்படும் ஆண்ணக்கு எதிராகவோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/108&oldid=888802" இலிருந்து மீள்விக்கப்பட்டது