பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 வஞ்சி மூதுார் எந்தத் தனிச் சலுகையையும் வற்புறுத்தவில்லை. அப்படி ஒரு தனிச் சலுகை இல்லாத போது, அப்படிப்பட்ட எந்தி, தனிச் சலுகையையும் இங்கிலாந்து நாட்டில் வற்புறுத்தப் படாதபோது அதையொட்டி இந்தியாவிலும் அப்படிப்பட்ட தனிச்சலுகை எதுவும் தற்சமயம் இல்லை என்பது பெறப் படுகிறது." - ஒரு சட்டமன்ற உறுப்பினர், எந்த ஒரு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ், விசாரணை செய்யம்படாமலே கூட, கைது செய்யப்பட்டு, சிறையில் வைக்கப்பட்டிருப்பின், இப்போதுள்ள சட்டப்படி, அவர் சட்டமன்ற நடவடிக்கை களில் கலத்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார் என்பதில் ஐயம் ஏதுமில்லை." இதைப் போன்ற நிலை குறித்து உச்சநீதி மன்றம் நாடாளுமன்ற உறுப்தனர்க்கு, நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ளவும், நடவடிக்கைகளில் பங்கேற்கவும், வாக்களிக்கவும் அளிக்கப்பட்டுள்ள உரிமைகள், ஆராய்ந்து நோக்கும் போது அரசியல் அமைப்பின்படி அளிக்கப்பட்ட உரிமைகள் அல்ல, அவை அடிப்படை உரிமைகள் அங்ல. கைது செய்து சிறையில் வைக்கப் பிறபிக்கப்பட்ட ஆணை யைப் பொருத்தமட்டில், நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் சாதாரண குடிமகனுக்குள்ள தகுதியை விட, தனித் தகுதி எதையும் கோர முடியாது.' ஆனால் இத்தீர்ப்புகள் எல்லாம், நாட்டு நலனுக்குக் கேடு விளைவதைத் தடுக்கும் எண்ணத்தோடு, தடுப்புக் &rrøssø &lt-i-Lī (Preventive Detention Act) Guirgusso Liriridihaljé Flic—th (Maintenance of Public order Act) ஆகியவற்றின் கீழ்க் கைது செய்யப்பட்டவர்கள் மீது வழங்கப்பட்ட தீர்ப்புகள் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். , ' ' ' *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/109&oldid=888804" இலிருந்து மீள்விக்கப்பட்டது