பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 115 இதத தீர்ப்பில், அவ்வாறு தடுப்புக் காவல் சட்டத்தின் இழ் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும். சட்டமன்ற உறுப்பினர்க்குச் சட்டமன்றம் செவ்ல அனுமதி மறுக்கப்பட்டாலும் சட்டமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான அழைப்புகள் அவருக்கும் அனுப்பப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. - சென்னை உயர்நீதி மன்றத்தின் முன் வந்த ஒரு வழக்கில், பொதுநலம் பராமரிப்புச் சட்டத்தின் கீழ்க் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ஒரு சென்னை சட்டமன்ற உறுப்பினர், அவருக்கு சட்டமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பாணை கிடைக்கப் பெற்ற போது, சென்னை சட்டமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ள 'தனக்குள்ள உரிமைகளை நிலைநாட்டவும், செயல் படுத்தவும். ஆணை பிறப்பிக்க முறையிட்டார், என அத் தீர்ப்பில் கூறப்பட்டிருப்பது காண்க. . - ஆக, சிறையில் எந்தச் சட்டத்தின் கீழ் அடைக்கப் பட்டிருந்தாலும், சட்டமன்ற உறுப்பினர்களுக்குச் சட்ட மன்றக் கூட்டத்திற்கான அழைப்பாணை அனுப்பப் பெற வேண்டியது இன்றியமையாதது. அது, அவ்வுறுப்பினரின் உரிமை. அது அனுப்பாமல் நடைபெறும் சட்டமன்றக் கூட்டம் சட்டப்படி செல்லும்படியாகாத திட்டமே ஆகும். குடிமகனின் அடிப்படை உரிமையா? சட்டமன்ற உரிமையா? - முதலிடம் எதற்கு? உச்சநீதி மன்றம் தந்த தீர்ப்பு! ஓர் உறுப்பினர்க்கு அழைப்பு ஆணை அனுப்பாமல் சட்டசபைக் கூட்டம் தொடங்கப்படுதல் கூடாது. அவ்வாறு: நடைபெறும் சட்டசபைக் கூட்டம் செல்லாது, அக் கட்டத்தில் நடைபெற்ற செயல் எதுவும் செல்லாது, என்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/110&oldid=888808" இலிருந்து மீள்விக்கப்பட்டது