பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 - வஞ்சி மூதுTர் தைப் பாராளுமன்ற, சட்டமன்ற நடைமுறைகள் குறித்து வழங்கப்பட்ட பல்வேறு தீர்ப்புச் சான்றுகள் உறுதி செய் கின்றன என்பது உண்மை. ஆனால், அக்காரணம் காட்டி, பத்து உறுப்பினர்களின் பதவி இழப்புத் தீர்மானம் நிறைவேற்றிய சட்ட்சபைக் கூட்டம் செல்லாது என நீதிமன்றம் செல்ல முடியுமா? அரசியல் சட்டம் 105 (2); 194 (2) பிரிவுகள், நாடாளு மன்ற, சட்டமன்ற செயல்பாடு குறித்து, யாரும், எந்த வழக்கு மன்றத்திலும் முறையீடு செய்யக் கூடாது என்றும் அரசியல் சட்டம் 122வது மற்றும் 212வது பிரிவுகள் பாராளு மன்றத்து எந்தச் செயல்பாடு குறித்தும் வழக்கு எதையும் எந்த நீதிமன்றமும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் தெளிவாகக் கூறியிருக்கும் போது இது குறித்து நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கலாமா என்ற கேள்விகள் முறையானவையே. - ஆனால், பாராளுமன்ற, சட்டமன்ற நடவடிக்கை குறித்து விசாரிக்கும் உரிமை நீதிமன்றத்திற்கு இல்லை எனக் கூறும் நம் அரசியல் சட்டத்திலேயே, பாராளுமன்ற, சட்ட மன்ற முறை கேடுகள் சில குறித்து நீதிமன்றம் விசாரிக் கலாம் என்பதற்கும், அவ்வகையில் விசாரிக்கப்பட்டுள்ளன என்பதற்கும், ஏராளமான முன் மாதிரிகளும் உள்ளன: அவற்றுள் சில : - பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பேச்சுரிமை அரசியல் சட்டம் 105 (1) பிரிவிலும், சட்டமன்ற உறுப்பினர் களுக்கான பேச்சுரிமை அரசியல் சட்டம் 194 (1) பிரிவிலும் வழங்கப்பட்டிருப்பது போலவே. இந்தியக் குடிமகன் ஒவ் வொருவனுக்குமான பேச்சுரிமை, அரசியல் சட்டம் 18 (எ) பிரிவில் வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் பேசப்பட்ட பேச்சு, நிகழ்ந்த செயல்பாடு குறித்து எந்த நீதி மன்றமும் விவாதிக்கக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/111&oldid=888810" இலிருந்து மீள்விக்கப்பட்டது