பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

r. கோவிந்தனார் 117. கூடாது என அரசியல் சட்டம் 105 (1) பிரிவும், அதே போல் சட்ட்மன்றத்தில் பேசப்பட்ட பேச்சு, நிகழ்ந்த செயல்பாடு. குறித்து எந்த நீதிமன்றமும் விவாதிக்கக் கூடாது என அரசியல் சட்டம் 194 (2) பிரிவும் தடை விதித்து இருக்கின்றன. ஆனால், அரசியல் சட்டம் 19 (எ) பிரிவின் கீழ் இந்தியக் குடிமகன் ஒருவனுக்கு வழங்கப்பட்ட உரிமையை நிலை நாட்டிக் கொள்ள உச்சநீதிமன்றம் செல்ல, குடிமகனுக்கு அரசியல் சட்டம் 32 பிரிவு உரிமை வழங்கியுள்ளது. எம்.எஸ்.எம். சர்மா என்பவருக்கும், கிருஷ்ண கின்ஷா என்பவருக்கும் இடையிலான வழக்கு ஒன்றில் உச்சநீதி மன்றம், "அரசியல் சட்டம் 10 (3), மற்றும் 194 (3) பிரிவுகள் முறையே பாராளுமன்ற, சட்ட மன்றங்களால் இயற்றப் பட்ட சாதாரணச் சட்டங்கள் அல்ல; அவை அரசியல் அமைப்புச் சட்டங்களாகும்” என்றும், "அவை, அடிப்படை உரிமைகள் சம்பந்தப்பட்ட அரசியல் சட்டப் பிரிவுகளைப் போலவே முழுமை பெற்றனவாம்” என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது.' - இதை, கவுல் அவர்களும், ஷக்தர் அவர்களும் "பாராளு மன்ற பழக்க வழக்கங்களும், நடைமுறைகளும்' என்ற தம்முடைய நூலின் 232ஆம் பக்கத்தில் எடுத்துக் காட்டியுள்ளனர். - - இந்த அரசியல் சட்டப் பின்னணியில் பாராளுமன்ற சட்டமன்ற உரிமைகளுக்கும், குடிமகனின் அடிப்படி உரிமை களுக்கும் மோதல் வரும்போது என்ன நிலைமை என்பதைப் பார்க்கவேண்டும். அதற்கான விளக்கத்தையும் உச்ச நீதி மன்றம் தன்னுடைய தீர்ப்பு ஒன்றில் வழங்கியுள்ளது. 1954-இல் கேசவசிங் என்பவர் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/112&oldid=888812" இலிருந்து மீள்விக்கப்பட்டது