பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 வஞ்சி மூதூர் பற்றிக் கூறிய கருத்து சட்டமன்றத்தையே அவமதித்ததாகக் கொண்டு உத்திரப்பிரதேச சட்டமன்றம் அவருக்கு ஏழு நாள் சிறைத் தண்டனை விதித்து சிறையில் அடைத்து விட்டது. கேசவசிங் அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். நீதி மன்றம் வழக்கை ஏற்றுக் கொண்டு அவரை ஜாமீனில் விடுதலை செப்தது. இதற்கிடையில் அவர் ஆறுநாள் சிறை தண்டனை அனுபவித்தும் விட்டார். - உத்திரபிரதேச சட்டசபை, அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் செயல் உரிமை மீறியதாகும், எனக்கொண்டு கேசவசிங், அவர் வழக்கறிஞ்ர், வழக்கை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஆகியோரைக் கைது செய்து கொண்டு வருமாறு தீர்ப்பளித்தது; உயர்நீதி மன்றம் சட்ட மன்றத்தின் அச்செயற்பாட்டிற்குத் தடை விதித்து விட்டது. சட்ட மன்றத்திற்கும், நீதி மன்றத்திற்கும் மோதல் வரவே, குடியரசுத் தலைவர், அரசியல் சட்டம் 143வது பிரிவின் கீழ், இதில் உச்ச நீதிமன்றத்தின் கருத்தறிய உச்சநீதி மன்றத் திற்கு அனுப்பி வைத்தார். உயர்நீதிமன்றம், இந்திய அரசியல் அமைப்பு ஒரு குடி மகனுக்கு வழங்கியிருக்கும். அடிப்படை உரிமைக்கு ஊறு நேரும் போது, அவனுக்கு நீதிமன்றம் செல்ல அரசியல் அமைப்புச் சட்டம் அனுமதி அளித்துள்ளது. அடிப்படை உரிமைக்கும், சட்டமன்ற உரிமைக்கும் மோதல் வரும்போது, அடிப்படை உரிமையே முகல் இடம் பெரும், ஆகவே, கேசுவசிங் வழக்கை ஏற்றுக் கொண்ட அலகாபாத் நீதி மன்றச் செயல் முறையானதே எனத் தீர்ப்பு வழங்கி விட்டது.' - - . - உச்சந்தி மன்றத்து இத்தீர்ப்பை திருவாளர் கவுல் அவர் களும் திருவாளர் ஷக்தர் அவர்களும் தம்முடைய நூலின் 232வது பக்கத்தில் எடுத்துக் காட்டியுள்ளனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/113&oldid=888814" இலிருந்து மீள்விக்கப்பட்டது