பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 119 இதே தீர்ப்பை, இந்திய நாடாளுமன்ற, சட்டமன்றப் பேரவைத் தலைவர்களின் 50வது ஆண்டு நிைறவு விழாவை யொட்டி வெளியிட்ட விழாமலரிலும் முன்னாள் மக்களவை துணைத்தலைவர் திரு ஜி. ஜி. ஸ்வெல் அவர்கள் எடுத்துக் காட்டியுள்ளார்.15 - . . உச்ச நீதிமன்றக் கருத்து இதுவாகவே, அரசியல் சட்டத்தையே திருத்த வேண்டுமென்று உத்திரப்பிரதேசச் சட்டமன்றம் கருதியது. இதற்கிடையில் கேசவசிங் வழக்கை ஏற்று விசாரித்த அலகாபாத் உயர்நீதி மன்றம், சட்டமன்றத் தீர்ப்பு, அரசியல் அமைப்புச் சட்ட த்திற்கு முரணானது அன்று. ஆகவே கொடுத்த தண்டனை முறையானதே எனத் தீர்ப்பளித்து விட்டது. இந்நிகழ்ச்சியால் உத்திரப்பிரதேச சட்டமன்றம் கேசவ சிங்கிற்கு வழங்கிய தண்டனை நிறைவேற்றப்பட்டது என்றாலும் - “இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமைக்கும் சட்டமன்ற உரிமைக்கும் மோதல் வரும்போது, அடிப்படை உரிமைக்கே முதலிடம் உண்டு. அவ்வகையில் அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டவர், சட்டமன்றத்தை எதிர்த்து வழக்கு தொடுக்கலாம். உயர்நீதி மன்றம் அவ்வழக்கை ஏற்றுக் கொள்ளலாம் என உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு மாற்றப்படாமல் அப்படியே நிற்கிறது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். இந்நிலையில், 1965 சனவரி 11, 12 தேதிகளில் பம்பாயில் கூடிய நாடாளுமன்ற, சட்டமன்ற சப்ாநாயகர்களின் மாநாடு, உத்திரப்பிரதேச சட்டமன்றத்திற்கும் அலகாபாத் உயர்நீதி மன்றத்திற்கும் இடையில் ஏற்பட்ட மோதல் குறித்து, உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்தினை விரிவாக ஆராய்ந்து, அரசியல் சட்டம் 105, மற்றும் 194 பாராளு மன்றத்திற்கும், மாநில சட்ட மன்றங்களுக்கும் வழங்கியுள்ள உரிமைகள் எந்த வகையிலும் பாதிக்காத வகையில் அவ்விரு சட்டங்களும் திருத்தப்பட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது. - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/114&oldid=888816" இலிருந்து மீள்விக்கப்பட்டது