பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 வஞ்சி முதுTர் அவ்வாறே, கீழ்வரும் தீர்மானத்தையும்நிறைவேற்றினர் 'உச்சநீதி மன்றம் வழங்கிய கருத்து, பாராளுமன்ற சட்ட மன்றங்களைத் தரத்தில் குறைந்த நீதிமன்ற நிலைக்குத் தள்ளிவிட்டதன் பயனாக, பாராளுமன்றம் மற்றும் சட்ட மன்றங்கள் தங்கள் பணிகளைத் திறமையாகவும், நியாய மாகவும், கண்ணியமாகவும் நிறைவேற்றத் தடையாகிவிடும், ஆதலின் பாராளுமன்ற, சட்ட மன்றங்களுக்கும் அவற்றின் உறுப்பினர்களுக்கும், அவற்றின் பல்வேறு குழுக்களுக்கும் உள்ள அதிகாரம், உரிமை சட்டப் பாதுகாப்பு ஆகியன அரசியல் சட்டத்தின் எந்தப் பிரிவுக்கும் கீழ்ப்பட்டதாகவோ அவற்றால் நடவடிக்கை எடுக்கக் கூடியதாகவோ இருத்தல் கூடாது என்று, அரசியல் சட்டத்தை உருவாக்கியவரின் நோக்கம் ஐயத்திற்கு அப்பாற்பட்டது என்பதை நிலை நாட்டும் வகையில் அரசியல் சட்டம் 105 மற்றும் 194க்கும் பொருத்தமான திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என இம்மாநாடு தீர்மானிக்கிறது.* - இந்தியப் பாராளுமன்ற, சட்டமன்றப் பேரவைத் தலைவர்கள் மாநாடும், உச்சநீதி மன்றத் தீர்ப்பின் விளைவாக பாராளுமன்ற, சட்டமன்ற உரிமைகள் பறிக்கப் படுவதைத் தடுக்க அரசியல் சட்டத்திற்குப் பொருத்தமான திருத்தங்களைக் கொண்டு வரவேண்டும் என்று தான்கருத்து தெரிவித்ததே ஒழிய அடிப்படை உரிமைக்கும், பாராளுமன்ற சட்டமன்ற உரிமைக்கும் மோதல் வரும் போது, அடிப்படை உரிமைக்கே முதல் இடம் என்றும், பாராளுமன்ற சட்டமன்ற உரிமைகள் அடிப்படை உரிமைக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்றும் அது நடவாத போது, அடிப்படை உரிமை பாதிக்கப் பெற்றவர் பாராளுமன்றம், சட்டமன்றங் களை எதிர்த்து நீதி மன்றம் செல்லும் உரிமை படைத்தவ சாவார் என்றும் கூறிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு தவறானது என்று தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/115&oldid=888818" இலிருந்து மீள்விக்கப்பட்டது