பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 123 1969-ஆம் ஆண்டு பூரி கோவர்த்தன பீடம் சங்கராச் சாரியாரின் ஒரு கருத்து, செயல் குறித்து, நாடாளு மன்றத்தில் கொண்டு வரப்பட்ட ஒரு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது அவையில் கூறப்பட்ட சொற்களால் மனம் புண்பட்ட, அம்மடத்தைச் சேர்ந்த தேஜ்கிரான். ஜெயின் என்பவர் மக்களவை சபாநாயகர் மீது டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு கொடுத்தார். நீதி மன்றம் வழக்கை ஏற்றுக் கொண்டு, சபாநாயகர். உள்துறை அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு விளக்கம் கேட்டுக் கடிதம் அனுப்பியது. கடிதம் மறுக்கப் பட்டாலும், வழக்கின் முடிவை எதிர்நோக்கி நாடாளு மன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையே, டெல்லி உயர்நீதி மன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டது என்றாலும், உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க அனுமதித்தது. வழக்கை ஏற்றுக் கொண்ட உச்சநீதி மன்றமும் பாராளுமன்ற சபா தாயகர் உள்ளிட்ட மூவருக்கும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது. பாராளுமன்ற சபாநாயகர் கடிதத்தைப் பெற மறுத்து விட்டார். இதற்கிடையில் உச்சநீதி மன்றமும் வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டது. ." பாராளுமன்றம், ஜெயினின் இச்செயல் உரிமை மீறிய தாகும் எனக் கருதி, உரிமைக் குழுவுக்கு அனுப்பியது. உரிமைக் குழு, இதுதான் முதன்முறை என்பதாலும், நீதி மன்றங்கள் வழக்கை ஏற்றுக் கொண்டிருந்தாலும், இறுதியில் பாராளுமன்ற நிகழ்ச்சியில் தலையிட உரிமை இல்லை என தெரிவித்து விட்டமையாலும், இத்துடன் விட்டு விடலாம். மேற்கொண்டு எந்தவித நடவடிக்கையும் தேவையில்லை எனக் கூறி முடித்து விட்டது. ; :.. " இந்நிகழ்ச்சி குறித்து பேரவைத் தலைவர்கள் மாநாட்டு மலரில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/118&oldid=888824" இலிருந்து மீள்விக்கப்பட்டது