பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 131 May) என்பார் எழுதிய அந்த நூலும் பாரளுமன்றத்து pool (popædir’ (Proceedings in Parliamint) srsion தொடருக்கு இதுதான் தெளிவான பொருள் என்று திட்ட வட்டமாகக் கூறவில்லை அது. கூறும் விளக்கம் வருமாறு. “பாராளுமன்றத்திற்கே உரிய சட்ட நுணுக்கச்சொல் லாம் நடைமுறைகள்” (Proceedings) என்பதற்கான மூலப்பொருள் (குறைந்தது 17-வது நூற்றாண்டு வரை அது கொண்டிருந்த பொருள்), முறையான சில செயல் பாடுகள், வழக்கமாகப் பாராளுமன்றம் தன்னுடைய ஒருங் கிணைந்த கூட்டுத்தன்மையில் எடுக்கும் முடிவு என்பதே ஆம். இப்பொருள் இயற்கையாகவே பாராளுமன்றம் எடுக்கும் செயல்பாடுகளுக்கு ஆதாரமான அவை அலுவல் களின் முறைகளையும், பாராளுமன்றத்து மொத்த நடை முறையினையும், அவற்றுள்ளும் தலையாயதான, இறுதியில் எடுக்கும் முடிவினுக்கு வழிவகுக்கும் அவையின் வாதத்தை தையும் குறிக்கும் வகையில் விரிவாக்கப்பட்டது.”* பாராளுமன்ற நடைமுறைகளில் திளைத்து எழுந்து முதிர்ந்த அறிவு பெற்றவர்களாகிய திருவாளர்கள் கவுல், ஷக்தர் ஆகிய இவர்களாலும், பாராளுமன்ற நடைமுறை" (proceedings in parliament) srairp i Olga –ajág ži தெளிவான பொருளைக் கூற முடியவில்லை. “பாராளுமன்ற பழக்கங்களும் நடைமுறைகளும்’ என்ற தம் நூலில் ஒரு பத்தியின் தொடக்கத்தில்’ பாராளுமன்றத்தின் நடைமுறைகள் (proceedings inparliament) என்ற தொடருக்கோ, 'பாராளுமன்றத்தில் சொல்லப்பட்ட எந்தப்பொருளும்’ (Anything Said inparliament) என்ற தொடருக்கோ சட்டங்களை ஆராய்ந்து முடிவு கூறும் நீதிமன்றங்களால் தெளிவான பொருள் உணர்த்தப்படவில்லை’ என்று முதல் வாக்கியத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/126&oldid=888844" இலிருந்து மீள்விக்கப்பட்டது