பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 - - வஞ்சி முதுரர் முடித்துவிட்டு அடுத்து எர்ஸ்கின்மே அவர்கள் கூறியதாக மேலே எடுத்துக்காட்டிய பகுதியை, எழுத்துப்பிசகாமல் அப்படியே எடுத்துக்கூறி முடித்துவிட்டு, அடுத்த பத்தியில் பின்வருமாறு கூறியுள்ளார்கள். - “பாராளுமன்றத்தின் நடைமுறைகள்” என்ற தொடர் கேள்வி கேட்பது, அக்கேள்வியை எழுத்து மூலம் அறிக்கை யாகக் கொடுப்பது ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாம். அவையின் உறுப்பினர் என்ற முறையில், தன்னுடைய பாராளுமன்ற அலுவல்களை, இரு அவைகளிலும் ஆற்றும் வகையில் சொல்லிய அனைத்துச் சொல்லையும் ஆற்றிய செயல்களையும் போலவே, இரு அவைகளின் குழுக்களிலும், ஒர் உறுப்பினர் என்ற உரிமையில் தன் கடமையை நிறை வேற்றும் வகையில், கூறிய ஒவ்வொரு சொல்லையும், ஆற்றிய ஒவ்வொரு செயலையும் உள்ளடக்கியதாம் என்று முடித்துள்ளனர். - அதோடு நில்லாமல் அடுத்து. 'ஒரிசா உயர்நீதி மன்றம், “பாராளுமன்றத்தில் நடைமுறைகள்” என்ற தொடர், பாராளுமன்றம் உண்மையில் கூடி இருக்கும் காலத்து அவை நடவடிக்கைகளை மட்டும் குறிப்பிடும் நிலையில் வரையறுத்து வைக்கப்பட்டுவிட வில்லை. கேள்விகளுக்கான அறிக்கைகளைக் கோடுப்பது. தீர்மானங்களுக்கான அறிக்கைகளைக் கொடுப்பது போலும், கில பூர்வாங்க நடவடிக்கைகளையும் உள்ளடக்கியதாம். கூறிய அத் தொடரின் அச்சொல்லாட்சி நிலையிலிருந்து, உய்த்துணரக் கிடக்கும் இப்பொருளாட்சி. ஒரு கேள்விக்கான அறிவிக்கை கொடுக்கப்பட்டுப் பேரவைத் தலைவர் அதை ஏற்பதோ மறுப்பதோ செய்யும் போது, அக்கேள்வி, உண்மையில் நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே கேட்கப்பட்ட நிலைக்கு ஏற்ப ஏற்கப்பட்டது அல்லது மறுக்கப்பட்டது என் ற கருத்தோட்டத்தில் பெறப்பட்டதாகும்’ எனத் தெரிவித்த கருத்தையும் எடுத்துக்காட்டியுள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/127&oldid=888846" இலிருந்து மீள்விக்கப்பட்டது