பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர.கோவிந்தனார். 13 சோலைகளுக்கும், தாமரைப் பொய்கைகளுக்கும் இடமாய் அது விளங்கிற்று.* - - வஞ்சி மாநகரை வளைந்து நிற்கும் கோட்டைக்கு அரண் அளித்து நிற்பது காவற் காடு; ஆகவே, அக்காவற் காட்டினைக் காப்பதில் அரசர்கள் கருத்துடையராப் இருந்தனர்: அதனால் காவற்காட்டைக் காக்கும் வீரசி களை, அக்காவற்காட்டை அடுத்திருக்குப் புறநகரில் வாழ வைத்தனர். - - தம்மோடு நட்புடையராப் வாழும் பிறநாட்டு வேந்தர்கள், தம் தலைநகர்க்கு வந்து, தம்மோடு சிலநாள்; வாழ்தலும் உண்டு அவ்வாறு வரும் வேந்தர்கள் நண்பர் களேயாயினும் வேற்று நாட்டு வேந்தர்களைத் தலைநகர் அகத்தே வாழவைத்தல், அரசியல் அறிவுடைமை ஆகாது: அது, தம் படைவலிமையை அவர்கள் அறிந்துகொள்ள வாய்ப்பளிப்பதாகும்; அது தம் ஆட்சிக்கு ஆக்கம் அளிப்ப தாகாது. அதனால், அவ்வேந்தர்களை வரவேற்று இருக்க வைக்கும் விருந்தினர் மாளிகைகளை, வஞ்சி வேந்தர் புறநகரில் அமைத்தனர்." - கங்கைக் கரைக்கண் நிகழ்ந்த போரில் தோற்று கண்ணகிச் சிலைக்கு வேண்டும் கல் சுமந்து வந்து சிறைப் பட்ட களகவிசயர் என்ற வடநாட்டு வேந்தர்களைக் கண்ணகிக்குக் கோயில் கட்டிச்சிலை நாட்டிச் செய்யும் விழாவின் நினைவாய் விடுதலை செய்து விழா முடியுங் காரும் வைத்திருந்து, அவர்க்கு, வேண்டுவன எல்லாம் விரும்பி அளித்து அன்பு காட்டி அனுப்பும் பெரும் பணியைத் தன்பெரும் படைத் தலைவனாய வில்லவன் கோதைபால் ஒப்படைத்த செங்குட்டுவன். அவர்களை, வஞ்சி மாநகன்ர வளைத்திருந்த மதிலைச் சூழ அமைந்திருந்த அகழிக்கும் அப்பால், புறநகரில், பூஞ்சோலைகளுக்கிடையே அமைந்: திருந்த, வேண்மாடம் அல்லது வேளாவிக்கோ மாளிகை'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/13&oldid=888852" இலிருந்து மீள்விக்கப்பட்டது