பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 வஞ்சி மூதூர் எனப்பெயர் பூண்ட விருந்தினர் மாளிகையில் வாழவைக்கும் வண்ணம் பணித்தான் எனச் சிலப்பதிகாரம் செப்புவது அறிக." - புறநகர் மக்கள் அகநகர் புகினும், அகநகர் மக்கன் புறநகர்வரினும், அகழியைக் கடத்தல் வேண்டும். அரண் கருதி அமைக்கப்பட்ட அகழி, அவ்வரணகத்து மக்களின் வாழ்க்கைத் துணையாயும் விளங்குதல் வேண்டும் என அவ்வேந்தர்கள் விரும்பினர்; அதனால், அவ்வகழியில், அடியிட்டாரைக் கவ்வி ஈர்த்துக்கொன்று உயிர் போக்கும் கொடுமை வாய்ந்த இடங்கர் போலும் முதலை இனங்களை வளர்த்ததோடு, மீன்களை விடுத்து அகழி நீர் தூய்மை யுறவும், மக்களின் மனைகளினின்றும் கழித்துவிடப்படும் கழிநீர், நகரில் கண்ட கண்ட இடங்களில் தேங்கி, நகர்வாழ் மக்களை நோய்க்கு உள்ளாக்கா வண்ணம், அந்நீரல்லாம் தான் ஏற்று, நகரின் நோய்போக்கும் நல்ல மருத்து வனாகவும் விளங்கிற்று அவ்வகழி; அம்மட்டோ கழிநீர் தேங்கிக்காணவும், அணுகச்சென்று நிற்கவும் இயலாவாறு, முடைநாற்றம் வீசும் அவ்வகழியில் அழகும் மணமும் வாய்ந்த அல்லி, தாமரை முதலாம் மலர்க்கொடிகளை வளர்த்து, அதைக் கண்ணும் மனமும் விரும்பும் காட்சி யுடையதாக மாற்றி மகிழ்ந்தனர்." - மன்னகளில், மகளிர் நீாாடிக் கழித்த நீரும், ஊர்ப் பொதுவிடத்தில் உன்ன, வேண்டுமளவு நீரை நிறைக்கவும் போக்கவும் வல்ல பொறி அமைந்த குளத்தில், நகர நம்பியரும், நங்கையரும், குளித்து எழுந்தொறும் எடுத்து விடப்படும் நீரும், மன்னவன் பிறந்த நாள் விழாவில் வருவார்மீது வீசிய வாசனை நீரும் அருளறம் மேற்கொண்ட 'ஆன்றோர்களை வணங்கி வரவேற்பார், அவர் அடிகளை கழுவி விடுக்கும் நீரும், அருள் உள்ளம் பெற்ற பெரி யோர்கள், ஆங்கங்கே வைத்து நடாத்தும் அறச்சாலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/14&oldid=888865" இலிருந்து மீள்விக்கப்பட்டது