பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* கா. கோவிந்தனார் - 15 களில், வருவார் உண்ணுங்கால் ஒழுகிய மணம் நாறும் உண்னு நீரும், அகில் ஆரம் முதலாம் அறுவகை மணப் பொருள்களையும் ஒன்றுகூட்டி அரைத்து விடுத்த நீரும், நகரின் நடுவே நின்று தேங்காது, நகர வீதிகளின் ஒரத்தே அமைந்த கழிநீர்க்கால்வாய்கள் வழி ஓடி, நகர்ப்புறத்தில் ஒன்று சேர்ந்து, இறுதியில் அகழியில் வீழ்ந்து, அவ்வகழி நீரோடு ஒன்று கலக்குமாறு நகரெங்கும் ஒன்றொடொன்று இணைந்து கிடக்கும், சிறியவும் பெரியவுமான கழிநீர் கால் வாய்களை மண்ணுக்கடியில் பொறுத்தி வைத்தனர்." அகநகரைச் சூழ, அகழிநீர் அலைக்க அமைந்திருந்த மதில் அகழலாகாஅடி அகலமும், ஆழிக்சலாகத் திண்மையும், ஏணியிட்டு ஏறலாகா உயர்வும், அரணகத்து வீரர், அகதி திருந்தவாறே, புறத்தே சூழ்ந்து கிடக்கும் பகைவர் படையை அம்பு ஏலி அழிக்குமாறு ஏவறைகள் அமைத்த தற்கேற்ற தலையகலும் வாய்ந்தது அம்மதில், அம்மட்டோ: அம்மதிலில், பகைவர் கண்ணிற்குப் புலனாகாவாறு, பல வகைப்பட்ட பொறியடைகளும், ஆங்காங்கே பொறுத்தி வைக்கப்பெற்றிருந்தன," . நகரின் நாற்புறமும் அமைந்திருந்த வாயில்கள் பலநிலைகளைக்கொண்ட மாடங்களோடும், அம்மாடங்கள் மீது ஏற்றிய வில்ப்ொறித்த கொடிகளோடும் நின்று, வெண்ணிறச் சுண்ணம் பூசப்பெற்று வெள்ளி மலையை இடையே குடைந்து வழிகண்டாற்போலும் காட்சி அளிக்கும் சிற்பமும், ஒவியமும், அம்மாடங்களுக்கு மேலும் சிறப்பை யளித்துத் திகழ்ந்தன." - வாயிலைத்தாண்டி நகருக்குள்ளே செல்வார், வாயிலைக் காக்கும் வீரர்கள் வாழும் வீதிகளையும், மீன், உப்பு, கள், அப்பம், பிட்டு ஆகிய ஏழை மக்களின் உணவுப்பொருள் களை விற்கும் சிறு வாணிகர் வீதிகளையும், வாசனைப் பொருள்களை விற்போர் வீதியையும். இறைச்சி வணிகர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/15&oldid=888867" இலிருந்து மீள்விக்கப்பட்டது