பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 வஞ்சி மூதுார் வாழும் வீதியையும், மண்கலம் வினையும் குயவர்களும், செப்புக்கலம் செய்யும் செம்பு கொடிகளும், வெண்கலம் வினையும் கன்னாரும், பொற்கொல்லரும். தச்சரும், பாவை பண்ணும் சிற்பியும், ஆடை ஆக்கித் தரும் தையற்காரரும் மலர் மாலை கட்டித் தருவோரும், காலம் அறிந்து கூறும் காலக் கணிதரும், யாழ் இசைக்கும் பாணர் களும் வாழும் விதிகளையும், சங்கறுத்து வளையல் முதலா யின செய்வோர் வீதியையும், நவம ணித் தொழிலாளர் வீதியையும், நாடகக் கணிகையர் வீதியையும், நெல், புல் முதலாம் எண்வகைக் கூலங்கள் குவிந்து கிடக்கும் கூல விதியையும் நின்று வாழ்த்தவும், இருந்து வாழ்த்தவும் உரிமை வாய்ந்த சூதர், மாகதர், வேதாளிகர் வீதிகளையும்: கண்ஒளிநுழையா நுண்ணிய நூலால் ஆன மெல்லிய ஆடை களை விற்போர் வாழும் அறுவையர் வீதியையும், நால் வகைப் போன்னின் நலந்தெரிந்து விற்கும் பொன் வணிகர் வீதியையும், அந்தணர் சேரியையும், அரச வீதியையும், அமைச்சர் முதலாம் அரசியல்துணைவர்களின் வீதிகளையும் வரிசையாகக் கடந்து சென்றால் நகரின் நடுவே, அரசன் பெருங்கோயிலைக் காண்பர். - வெள்ளி மாடம் எனப் பெயர் பூண்ட, வஞ்சிமாநகரத்து அரசன் பெருங்கோயில், அந்நகரின் நடுவே நாற்புறமும், வாணிக வீதி முதலாம் பல்வேறு வீதிகள் சூழ்ந்து கிடக்க, பொன்னால் வேயப்பட்டு, நீர் சூழ்ந்த உலகின் இடையே, தனிமிக உயர்ந்து விளங்கும் மாமேரு மலைபோல் மாண்புறத். தோன்றும். பி. * - நகரின் இடையிடையே. நான்கு தெருவு கூடும் சதுக்கங் களிலும், மூன்று தெருவு கூடும் முச்சந்திகளிலும், நிழலும், நிறைந்த பழங்களும் தரும் மரங்கள் வளர்ந்த மேடைகளும்: வெளியூர் மக்கள் வந்து தங்குவதற்கேற்ற பொது மன்றங் கரும், அமைந்திருக்கும்; இந்நகரில், அரசன் கோயிலுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/16&oldid=888869" இலிருந்து மீள்விக்கப்பட்டது