பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 17 அணித்தாக, குதிரைகளையும், யானைகளையும் பழக்கப் பயன்படும் செண்டுவெளிகளும் காணப்படும். அரசனும், அவன் மனைவியும் சென்று மகிழ்தற்கேற்ற, அருவி வீழும் அழகிய செய்குன்றும், இளமரக்காவும், தாமரைக்குளமும், அவ்விடங்களை அடுத்து இடம் பெற்றிருக்கும். இவற்றொடு, அறச்சாலைகளும், அழகிய பொன்னம்பலங்களும், தவப் பள்ளிகளும் அவ்வநகர்க்கு அணிசெய்து கிடக்கும். 18 அறநூல் கேட்கும் அவாவுடையவராய், அந்நகருக்கு: வரும் பலநாட்டு அடியார்களும், அவர்களுக்கு அறம் உரைக் கும் அடிகளாகும் இருக்கத்தக்க, இந்திர விகாரம் எனப் பெயர் பூண்ட புத்தன் கோயில் ஒன்றும் அவ்வஞ்சி மாநகரில் விளங்கிற்று. 14 கண்ணகி கணவன் கோவலனுடைய ஒன்பதாம் தலைமுறைப் பாட்டனாகிய கோவலன் என்பான், சாரணர் பால் அறம்கேட்டு, அருள் உள்ளம் மேற்கொண்டு, தன் முன்னோர் வைத்துச் சென்றனவும், தான் ஈட்டி வைத்தனவு மாய தன் பெரும் பொருளை வருவார்க்கு வழங்கிய பின்னர் தான் இருந்து துறவறம் மேற்கொள்வதற்கு என அமைத்த" புத்தன் கோயில் ஒன்றும் அஞ்வஞ்சிமாநகரில் இடம். பெற்றிருந்தது. - கங்கைச் சடைமுடிக் கண்ணுதலும், நீள் நிலம் அளந்த, நெடுமாலும் வீற்றிருக்கும் கோயில்கள் இரண்டும் அந் நகர்க்கு அழகு தந்து நின்றன. வடநாடு நோக்கிப் படை. யெடுத்துச் சென்ற செங்குட்டுவன், செல்லும் முன்னர், சிவன் கோயிலார் அளித்த திருவடிப்பேற்றினைத் தலை யிலும், திருமால் கோயிலார் அளித்த திருவடிப்பேற்றினை புயத்திலும் ஏற்றுக்கொண்டான் எனச் சிலப்பதிகாரம் கூறுகிறது. *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/17&oldid=888871" இலிருந்து மீள்விக்கப்பட்டது