பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 வஞ்சி மூதூர் வஞ்சிமாநகர், ஒரு பேரரசின் தலைநகர்; அதனால் அவ்வரசிற்குப் பணிந்து திறை தரும் அரசர்களும், அவரோடு பகைகொண்டு வாழும் அரசர்களும், அவ்வஞ்சி நாட்டார் எந்த நேரத்தில் தம்மீது போர்தொடுத்து விடுவரோ என அஞ்சி அஞ்சி வாழ்ந்தனர்; வஞ்சியாரின் அரசியல் முறை களை, அவர் படைகளின் பெருமையை, அவற்றின் போக் கினை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டினர்; அதனால் அந்நாடுகளைச் சேர்ந்த ஒற்றர்கள், அவ்வஞ்சி நகரில் எக்காலமும் வந்து வாழ்ந்திருந்தனர்; அமர்முறையும் அரசியல் முறையும் வல்ல வஞ்சிவேந்தர்களும், வேற்று நாட்டு ஒற்றர்கள் தம் தலைநகரில் வாழ்வதை அறிந்தும், அவரால் தமக்கு எக்கேடும் வராது எனும் துணிவ்ால், அவர் வரவையும் வாழ்வையும் தடுத்திலர். கண்ணகி சிலைக்குக் கல் கொணற, செங்குட்டுவன் வடநாடு செல்வத் துணிந்தபொழுது "வேந்தே! வடநாடு செல்லும் நின் கருத்தினை, ஆங்குள்ள அரசர்க்குத் திருமுகம் அனுப்பித் தெரிவித்தல் நலமாம் ' எனப் படைத்தலைவன் வில்லவன் கோதை கூறியபொழுது, அமைச்சர் அழும்பில் வேள், “அரசே! நாவலந்தீவில் நம் பகைவராய் உள்ள அரசர்களின் ஒற்றர்கள், வஞ்சிநகரை விடுத்து இமைப் பொழுதும் அகல்வதில்லை. அவ்வொற்றர்கள், நம் வட நாட்டுச் செலவைத் தம் அரசர்க்கு அறிவித்துவிடுவர். ஆகவே, நம் படையெடுப்புச் செய்தியை , அவ்வொற்றர் அறியுமாறு, நம் நகர வீதிகளில் பறையறைந்து அறிவித்தல் ஒன்றே போதும்." எனக் கூறினார் என்ற சிலப்பதிகாரச் செய்தியால், பகைநாட்டு ஒற்றர்களின் வஞ்சிநகர் வாழ்வு உறுதியாதல் உணர்க. ' -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/18&oldid=888873" இலிருந்து மீள்விக்கப்பட்டது