பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. ஓவியக் கலை தமிழ் நாட்டு ஓவியக் கலை, கடைச் சங்க காலத்திலேயே முழுமை பெற்றுத் திகழ்ந்தது. அரசர் தம் அரண்மனைகள், செல்வர் தம் மாளிகைகள் ஆகிய கட்டடங்களின் சுவர் களிலும், துணிச்சீலையிலும் வெறும் க்ோடுகளினாலும், சுறுப்பும் சிவப்பும் மஞ்சளும் நீலமுமாகிய வண்ணங் களினாலும், மரம் செடி கொடிகள், மான் முதலாம். விலங்கு கள், மலை முதலாம் இயற்கைக் காட்சிகளைக் கண்கவர் வனப்பில் வரையும் ஆற்றலை, மக்கள் அன்றே பெற்றிருந் தனர். - புகார் நகரத்து மாடமாளிகைகளின் வெள்ளைச் சுண்ணாம்பு பூசிய சுவர்களில், தேவர், மக்கள், மாக்கள், மரம். செடி, கொடிகளின் வடிவங்களை வண்ணங்களால் வனப்புறத் தீட்டிய ஓவியங்களைத் தெருவில் போவோரும் வருவோரும் கண்டு, தம்மை மறந்து மகிழ்ந்து நிற்பதை, மணிமேகலை ஆசிரியர் அழகாக எடுத்துக் காட்டியுள்ளார். "சுடுமண் ஓங்கிய நெடுநிலை மனைதொறும் மையறு படிவத்து வானவர் முதலா. எவ்வகை உயிர்களும் உவமம் காட்டி - வெண்சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய கண்கவர் ஓவியம் கண்டு நிற்குநரும் s. . - -மணிமேகலை : 3 : 1.27.131.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/45&oldid=888933" இலிருந்து மீள்விக்கப்பட்டது