பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. வஞ்சி மூதூர் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த வனாகிய முதற்குலோத்துங்கன், நாகப்பட்டினத்தில் இருந்த, சூடாமணி வர்மதேவரின் பெளத்த விகாரத்திற்குக் கடாரத்தரசன் தன் தூதுவர் மூலம் வேண்டிக் கொண்ட தற்கு இணங்க, முன்னோர்கள் செய்திருக்கும் நிலதானங் களோடு தானும் பல நன்கொடைகளை வழங்கினான் என வரலாறு கூறுகிறது. என்றாலும், வைதீக சமயங்களின் முன் நிற்க மாட்டாது, சமண சமயம் அழிவதற்கு முன்பாகவே பெளத்த சமயம் அழிந்து விட்டது. பெளத்தம் அழித்து விட்டாலும், மணிமேகன்ல, குண்டலகேசி போலும் இலக்கிய நூல்களும், வீர சோழியம் போலும் இலக்கண நூலும், தமிழகத்து மக்கள் உள்ளத்தில், பெளத்த சமயத்திற்கு அழியா இடம் பெற்றுத் தந்துள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/44&oldid=888929" இலிருந்து மீள்விக்கப்பட்டது