பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனாரி . 45 வைதீக சமயம், அம்முறையைக் கைவிட்டு அருள் அறக் கொள்கைகளை மேற்கொண்டது. அது, உணவு மறுத்தல், உடலை வருத்தல் போலும் முறைகளைக் கைவிட்டு, இறைவனை, இன்பப் பாக்கள்.ாடி வழிபடல் போலும் எளிய முறைகளை மேற்கொண்டது; இசையும், நாடகமும் இடம் பெற ஆண்டவனுக்கு விழாவெடுக்கும் இனிய முறையையும் கண்டது; இவ்வகைகளால், வைதீக சமித் திற்கு மக்களிடையே மதிப்பு உயர்ந்தது. மேலும், பெளத்த சமயத்தை எதிர்த்த வைதீக சமயம், புத்தரைக் காட்டிலும், அவருக்கு மெய்யுணர்வு. ஊட்டிய, போதிமரமான அரசமரத்தை வழிபாட்டிற்கு உரியதாகவும் ஏற்றுக்கொண்டது. இவ்வகைகளால், சைவ, வைணவ சமயங்களாகிய வைதீக சமயங்களுக்கு மக்களிடையே பற்றும் பாசமும் மிக மிக, பெளத்த சமயம் மெல்ல மெல்ல மறையத் தலைப்பட்டது. கி.பி. எட்டாம் நூற்றாண்டில், அகளங்கர் என்னும் சமணர், காஞ்சியில் பெளத்தர்களை வாதில்வென்று சிங்களத்திற்குத் துரத்திவிட்டதாக வரலாறு கூறுகிறது. - கல்ாப்பிரர்களை வென்று, தமிழ் நாட்டில் தம் அரசை நிறுவிக் கொண்ட பல்லவர் காலத்தவராகிய திருஞான சம்பந்தர், சாத்தமங்கையிலும், மாணிக்கவாசகர் தில்லை யிலும் பெளத்தர்களை வாதிட்டுவென்று அழித்தனர். பெளத்தர்களை வென்று பெளத்த சமயத்தை அழிப்பதில். சைவ சமயத்தவர் ஆர்வம் காட்டியது போலவே வைணவர் களும் ஆர்வம் காட்டியுள்ளனர். திருமங்கை ஆழ்வார் என்ற வைணவப் பெரியார், நாகையில் உள்ள பெளத்த ஆலயத் தில் இருந்த பொன்னால் ஆன புத்தர் சிலையைக் கவர்ந்து வந்து, அதை அழித்துப் பெற்ற பொன் கொண்டு திருவரங்கத் திருக்கோயிலுக்குத் திருப்பணி புரிந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/43&oldid=888927" இலிருந்து மீள்விக்கப்பட்டது