பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 வஞ்சி மூதூர் இடம்மெற்று விட்டனர்: அதனால்தான், கடைச்சங்க காலம் வரையும் பெளத்த மதம் செல்வாக்கு இழக்காமல் சிறந்து விளங்கிற்று. கடைச்சங்க காலத்திற்குப் பிறகு, தமிழக அரசுகளை அழித்துவிட்டு ஆட்சி புரிந்த களப்பிரர் காலத்திலும், பெளத்த சமயம், தமிழகத்தில் சிறந்தே விளங்கிற்று; கி. பி.நாலாம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த அச்சுத விக்கந்தன் என்னும் களப்பிர்ன் காலத்தில் வாழ்ந்திருந்த புத்த தத்ததேரர் என்னும் பெளத்தப் பேராசிரியர், காவிரிப் பூம்பட்டின சிறப்பையும், ஆங்கு நிறுவப் பெற்ற பெளத்தப் பள்ளியின் பெருமையையும், தம்முடைய அபிதம்மாவதாரம் என்ற நூலில் விளங்கக் கூறியுள்ளார். மேலும், சோழநாட்டு பூதமங்கலத்தில் உள்ள பெளத்த விகாரையில் இருந்தபோது விநயவிநிச்சயம் என்ற நூலை இயற்றியதாகவும் கூறியுள்ளார். - இவ்வாறு கி. மு. மூன்றாம் நூற்றாண்டு தொடங்கி, இ. பி. நாலாம் நூற்றாண்டு வரை, ஏறத்தாழ எழுநூறு ஆண்டுகள், தமிழகத்தில் சிறக்க வாழ்ந்த பெளத்த சமயம், பின்னர் மெல்ல மெல்ல மறையத் தொடங்கிவிட்டது. வடநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்குத் தன்னோடு புகுந்த, சமண, வைதீக சமயங்களின் எதிர்ப்பு ஒருபுறமும், சனயானம், மகாயாம்ை என்பன போலும் அறுவகை உட் பிரிவுகளுக்கு உள்ளாகிவிட்டது ஒருபுறமும் ஆக, இவ்வகை பால் அது அழியத் தலைப்பட்டது. - மேலும், அறிவுப் பணி, அறப்பணிகளை ஆற்றி வந்த பெளத்தத் தேரர்கள். அந்நெறி மறந்து போக போக்கியங் களில் ஆழ்ந்து விட்டமையால், மக்களின் வெறுப்புக்கு உள்ளாயினர்: அதே நிலையில், வேள்வியில் உயிர்க்கொலை புரிதல், பிறப்பால் உயர்தாழ்வு கற்பித்தல் போலும் கொள்கைகளால், மக்களின் மதிக்கற்பாட்டினை இழந்திருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/42&oldid=888925" இலிருந்து மீள்விக்கப்பட்டது