பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் - 49 இரதி காமன் உறவு, கல் உருப்பெற்ற அகலிகை ஆகியோர் வரலாறு விளக்கும் ஒவியங்கள் நிறைந்த ஒரு சித்திரக் கூடந்தைப் பரிபாடல் நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறது. - - - - "இரதி காமன் இவள் இவன் எனாஅ. விரகியர் வினவ வினா இறுப்போரும், இந்திரன் பூசை, இவள் அகலிகை, இவன் சென்ற கவுதமன், சினனுறக் கல்லுரு ,” ஒன்றிய படி இது என்று உரை செய்வோரும் இன்ன பலபல எழுத்து நிலை மண்டபம்" பரிபாடல் ; 19 : 48-53 இத்தகைய சித்திரக் கூடங்களில், அக்கால அரசர்கள் தங்கி, அங்குள்ள ஒவியங்களைக் கண்டு இன்பம் நுகர்ந்து வந்துள்ளனர். அவ்வாறு அங்குத் தங்கி, இன்பம் நுகர்த் திருந்தபோது, நன் மாறன் என்ற ஒரு பாண்டிய மன்னன் அங்கேயே உயிர் துறந்தமையால், அவன், சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன் என்றே அழைக்கப்படுவதும் காண்க. ஒவியம் தீட்டுவதில் வல்லவர்கள். தமிழ்நாட்டுப் பேரூர் களிளெல்லாம் வாழ்ந்து வந்தனர். தாம் வரைந்த ஒவியங் களைப் பார்ப்பவர் கண்கள் எல்லாம் அவ்வோலியங்களி லேயே நிலைத்து நின்று விடத்தக்க வகையில் வரையும் வல்லமை பெற்ற அவர்களுக்குக் "கண்ணுள் விளைஞர்" எனப் பெயர் சூட்டி மகிழ்கிறது. பழந்தமிழ் இலக்கியம். தம் கண்ணாலும், கருத்தாலும் காணும். எவ்வகைக் காட்சி யையும் உள்ளது உள்ளவாறே வரைந்து காட்டும் அக் கண்ணுள் விளைஞர், மதுரை மாநகரில் வாழ்ந்திருந்ததை, மதுரைக் காஞ்சி அடிகளால் உணர்கிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/47&oldid=888937" இலிருந்து மீள்விக்கப்பட்டது