பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 வஞ்சி மூதுார் எவ்வகைச் செய்தியும் உவமம் காட்டி நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கின் கண்ணுள் விளைஞர்' ~ --மதுரைக் காஞ்சி : 516-519 தம் வாழ்க்கையில், ஒரு காலத்தே நிகழ்ந்த நிகழ்ச்சி களைத் தம் வாழ் நாளெல்லாம் மறவாமல் நினைவில் வைத்துக் கொள்ள விரும்பிய தமிழர்கள், அந்நிகழ்ச்சி களைத் தாம் காணும் இடத்தில் அழகிய ஓவியமாகத் தீட்டி வைக்கவும் தெரிந்திருந்தனர். . - சீவகனுடைய தாய் விசையை, தான் ஏறித் தப்பிச் செல்ல உதவிய மயிற் பொறியையும், இடு காட்டில், தான்' மகவு ஈன உதவிய பெண் தெய்வத்தையும், தன் அரண் மனைச் சுலரில் ஒவியமாகத் தீட்டி வைத்தாள் என்றும் பல்லக்கு ஊர்ந்து சென்று கொண்டிருந்த குணமாலையைத் தாக்கிய மதயானை மீது பாய்ந்து அடக்கி அக்குண மாலையைக் காத்த தன் செயலையும், மதங்கொண்ட அக்களிற்றின் முன் நின்ற குணமாலையின் நடுங்கிய தோற்றத்தையும் சீவகன், திரைச் சீலையில் தீட்டி மகிழ்ந்தான் என்றும், சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்க தேவர் குறிப்பிடுவது காண்க. - "தனியே துயர் உழந்து, தாழ்ந்து வீழ்ந்த சுடுகாட்டுள் இனியாள் இடர் நீக்கி ஏமம் சேர்த்திஉயக்கொண்ட கனியார் மொழியாட்கும், மயிற்கும் காமர் பதி நல்கி, முனியாதுதான் காண மொய் கொள் மாடத்து எழுதுவித்தாள்' "கூட்டினான் மணிபல தெளித்துக் கொண்டவன் தீட்டினான் கிழிமிசைத் திலக வாள் நுதல் வேட்டமால் களிற்றிடை வெருவி நின்றதோர் நாட்டமும் நடுக்கமும் நங்கை வண்ணமே' * . சீவகசிந்தாமணி 2603; 1003.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/48&oldid=888939" இலிருந்து மீள்விக்கப்பட்டது