பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 51 ஒவியத் தொழிலுக்கு அக்கால மக்கள் இட்டு வழங்கிய பெயர் வட்டிகைச் செய்தி என்பதாம். "வட்டிகைச் செய்தியின் வரைந்த பாவை’ (மணி மேகலை : 4 ; 57) என்ற தொடரைக் காண்க வட்டிகையாவது. வண்ணம் குழைத்துத் தீட்டும் துகிலிகை. செவ் வண்ணம் குழைத்த துகிலிகை பாதிரிப் பூப்போல இருக்கும் என்பார் புலவர். "ஒவ மாக்கள் ஒள்ளரக்கு ஊட்டிய துகிலிகை அன்ன துய்த்தலைப் பாதிரி" - நற்றிணை : 118 புனையா ஒவியமும், வண்ண ஒவியமும் வரையும் வழி முறைகளை விளங்கக் கூறும் ஒவியம் நூலும் அக்காலத் தில் இருந்தது. அக் கலையில், அக்கால மகளிரும் சிறந்து விளங்கினர்: மணிமேகலை அக்கலையை முற்றக் கற்றவள் என்கிறார் சாத்தனார். * . . " 'ஓவியச் செந்நூல் உரைநூற். கிடக்கையும் கற்றுத்துறை போகிய பொற்றொடி நங்கை." -மணிமேகலை 2 : 31-32. இவ்வாறு சங்க காலத்தே மிகச்சிறந்து விளங்கிய ஓவியக் கலை, பல்லவர், சோழர் காலத்திலும் சிறந்து விளங்கிற்று. பல்லவர்களில் சிறந்தோனாகிய மகேந்திரவர்மனுக்கு உரிய சிறப்புப் யெயர்களுள் "சித்திரகாரப்புலி’ என்பதும் ஒரு பெயராம். ஒவியம் வரைவதில் வல்லவன்ான அவன், ஒவிய நூலுக்கு உரை வளம் காண்பதிலும் வல்லவன் எனக் கல் வெட்டுக்கள் கூறுகின்றல. புதுக்கோட்டைக்கு அண்மையில் உள்ள சித்தன்ன வாசலில் உள்ள குகைக் கோயிலுள் மகேந்திரவர்மன் தீட்டி வைத்திருக்கும் வண்ண ஒவியங்கள் உலகப் புகழ் பெற்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/49&oldid=888941" இலிருந்து மீள்விக்கப்பட்டது