பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 வஞ்சி முதுரரி வாகும். பழமையும், பராமரிப்பு இன்மையும், அவ்வோவியத் பெரும்பகுதியை அழித்து விட்டன எனினும், மகேந்திர வர்மன், அவன் அரச மாதேவி, இரு நடன மகளிர் ஆகியோர் திருவுருவங்களையும், ஒரு தாமரைத் தடாகத்தை யும் சித்தரிக்கும் ஒவியங்கள் இன்னமும் கண்கொள்ளாக் காட்சிகளாய் விளங்குகின்றன. சித்தன்ன வாசல் ஒவியத்துக்குச் சற்று பிற்பட்ட காலத்தில் கட்டப்பட்ட காஞ்சி கைலாசநாதர் கோயில் ஒவியங்களும் வரலாற்றுப் புகழ் உடையவாகும். அவை இப்போது உருத்தெரியாமல் அறவே உருக்குலைந்து போயுள்ளன. - - பிற்காலச் சோழர்களுள் சிறந்தோனாகிய இராசராசன் தான் கட்டிய தஞ்சைப் பெரிய கோயில் சுவர்களில் சுந்தரர் வாழ்க்கை வரலாற்றை வண்ண ஒவியங்களாகவே தீட்டி வைத்துள்ளான். அவ்வோவியங்கள் மீது, வெள்ளைச் சுண்ணாம்பு பூசி, பிற்காலத்தில் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள், வேறு ஒவியங்களைத் தீட்டிச் சோழர் கால ஒவியங்களை மறைத்து விட்டார்கள். மறைந்து போன அச்சோழர் கால ஒவியங்களை நாம் காணச் செய்தவர் அண்ணாமலைப் பல்கலைக் கழக வரலாற்றுப் பேராசிரிய ராக விளங்கிய உயர்திரு. எஸ். கே. கோவிந்தசாமிப் பிள்ளை அவர்கள் ஆவார்கள். , மதுரை யை ஆண்ட நாயக்க மன்னர்களும் ஓவியக்கலை ஆர்வமிக்கவர்களாகவே காணப்படுகின்றனர். அவர்கள் கட்டிய மதுரை மீனாட்சி அம்மைக் கோயில் சுவர்களில் அவர்கள் தீட்டி வைத்திருக்கும் வண்ண ஒவியங்களே அதற்குச் சான்று ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/50&oldid=888945" இலிருந்து மீள்விக்கப்பட்டது