பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இசைக் கலை இயல் இசை நாடகம் என, இசைத் தமிழ்க்கு நடுவிடம் கொடுத்துச் சிறப்பிப்பது தமிழ்நாடு. "ஏழிசையாய் இசைப் பயனாய்’ என இறைவனை இசை வடிவினனாகவே கொண்டு வழிபட்டவர் தமிழர், - நண்பனின் தோள் மெலியுமளவு உடல்நலம் கெட்ட தற்காம் காரணத்தை அறியத் துடிக்கும் ஒருவன், 'நண்ப! மலை போன்ற உன் தோள் மெலிந்தது ஏனோ? மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் ஆராயப்படும் தமிழின் அகப்புறத்துறை ஆராய்ச்சியில் ஆழ்ந்து போனதாலா, அல்லது, ஏழிசை நுணுக்கங்களின் பயிற்சியிலும், ஆராய்ச்சியிலும் அடிமைப் பட்டோ” எனக் கேட்டதாக, மணிவாசகர் பாடும் கோவையார், ஏழிசைச் சி ற ப் ைப எடுத்துரைப்பது காண்க, 3. - - 'சிறைவான் புனல்தில்லைச் சிற்றம்பலத்தும், என் சிந்தையுள்ளும். உறைவான், உயர்மதில் கூடலின் ஆய்ந்த ஒண்திந் f - - தமிழின் துறைவாய் நுழைந்தனையோ! அன்றி, ஏழிசைச் - * சூழல் புக்கோ: இறைவா! தடவரைத் தோட்டு என்கொலாம் ‘. . . . புகுந்து அய்தியதே." -திருக்கோவையார் :20,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/51&oldid=888947" இலிருந்து மீள்விக்கப்பட்டது