பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 வஞ்சி மூதூர் உயிர் எழுத்துக்களும், மெய் எழுத்துக்களும், தமக்குரிய ஒலி அளவில், மிகுந்து ஒலிப்பது, ஏழிசையோடு இணைந்த யாழ் நூல்களிலும் நிகழும் எனத், தொல்காப்பியர் கூற்றிலிருந்து தமிழிசையின் பழமையும் பெருமையும் புலப் படும். - 'அளபு இறந்து உயிர்த்தலும், ஒற்றிசை நீடலும் உள என மொழிப, இசை யொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர்.” -தொல்காப்பியம் : எழுத்து : 33: முல்லை; குறிஞ்சி, மருதம், நெய்தல் பாலை என்ற ஐந்நிலங்களுக்கும் தனித்தனியான பண் வகைகளையும், பறை வகைகளையும் மேற்கொண்டவர் பழந்தமிழர். விடியற்காலைக்கு உரிய பண் இது; - மாலைக்கு உரிய பண் இது எனக், காலவேறுபாட்டிற்கு ஏற்ப பண் வேறுபாடு களை உணர்ந்து மேற்கொண்டவர் தமிழர். இசைக்கு உருகாத உயிர்களே இல்லை; கொல்களிறும், நச்சரவும் இசை கேட்டு தம் கொடுந்தொழில் கைவிட்டு அடங்கி நிற்கும். இன்னிசை கேட்டு தன்னை மறந்து இன்புற் றிருக்கும் நிலையில் அவ்விசைக்கு மாறான இன்னா ஒலி கேட்ட அக்கணமே அது கேட்கப் பொறாது உயிர்விடும் நுணுகிய உள்ளுணர்வு வாய்ந்த உயிரினம் ஒன்றும் தமிழகத் தில் பண்டு இருந்தது. அசுணமா என்று அழைக்கப் பெறும் அவ்விலங்கின் இவ்வியல்புணர்ந்த மக்கள் அதைக் கைப்பற்ற முனையும்போது, அது வாழும் இடம் தேடிச் சென்று யாழ், குழல் போலும் இன்னிசைக் கருவிகளை இயக்கி இன்னிசை எழுப்ப அது கேட்டு அது தன்னை மறந்து இன்புற்றிருக்கும் நிலையில் திடுமென பறை கொட்டிக் கடும் ஒலி எழுப்ப அது கேட்கப் பொறாது. மயங்கி விழ அதனைக் கவர்ந்து வரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/52&oldid=888949" இலிருந்து மீள்விக்கப்பட்டது