பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: கா, கோவிந்தனார் ss. செயலை நற்றிணைப் பாடல் ஒன்று நமக்கு நினை ஆட்டுகிறது. 'அசுணம் கொல்பவர் கைபோல் நன்றும் இன்பமும் துன்பமும் உடைத்து.' . . -நற்றினை : 304 கொலைத் தொழில் வல்ல களிறுகளை அடக்கிப் பணி கொள்ளும் இசை வல்லமையினைப் பழந்தமிழ்ப் பெண்டிர் பண்டே பெற்றிருந்தனர். பெரும் பசியோடு தினைப்புனம் புகுந்த ஒரு களிறு, அப்புனத்தைக் காவல் புரிந்து iென். டிருந்த குறக் குலப் பெண், குறிஞ்சி என்ற பண்ணைப் பாடத் தொடங்கியதும் அவ்விசைக்கு மயங்கி, தன் பசியை யும் மறந்து, மெய்ம்மறந்து நின்ற காட்சியை அகநானூற்றுப் பாடல் ஒன்று படம் பிடித்துக் காட்டுகிறது. - "ஒலியல் வார்மயிர் உளரினள் கொடிச்சி பெருவரை மருங்கில் குறிஞ்சி பாடக் குரலும் கொள்ளாது, நிலையினும் பெயராது படாஅப் பைங்கண் பாடுபெற்று ஒய்யென மறம்புகல் மழகளிறு உறங்கும்.” r. * , , . ... - -அகநானூறு 102 கொலைத் தொழிலே தம் குலத் தொழிலாகக் கொண்டு வாழும் கொடியவர்களின் கொடுங் குணத்தை மாற்றவல்ல படைக்கலமாகப் பண்டைத் தமிழர் இசையினையே மேற் கொண்டனர். வழிப் போக்கர்களைக் கொன்று, அவ்ர் உடைமைகளைக் கொள்ளையடித்து வாழும் கொடியவர் களாகிய ஆறலைக் கள்வர்களை, இடைவழியில் கண்டதுமே, வழிப் போக்கர்களில் இசை அறிந்தவர்கள், உடனே தம். கையில் படைக்கலம் ஏந்துவதற்குப் பதிலாக யாழை எடுத்து, அதில், அந்நிலத்துக்கு உரிய பாலைப் பண்ணை இ:ை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/53&oldid=888951" இலிருந்து மீள்விக்கப்பட்டது