பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் $7 கோடைக் காற்று நுழையும் வழி எழுப்பும் ஒசை, குழல் இசையாகவும்: காட்டாற்றில் தெளிந்து ஒடும் அருவி எழுப்பும்ஓசை, முழவோசையாகவும்; மான்கூட்டம் எழுப்பும் ஒலி, பெருவங்கிய இசையாகவும்; வண்டுகளின் ரீங்காரம் யாழ் ஒசையாகவும்; இவ்வகையால் பல்வேறு இசைகளும் கலந்து ஒலிக்கும் இசை இன்பத்தை, மந்தியும் மெய் மறந்து கேட்டு இன்புறும் இனிய காட்சியைக் கபிலர் காட்டி மகிழ்வது காண்க. . - 'ஆடமைக்குயின்ற அவிர்துளை மருங்கில் g கோடை அவ்வளி குழல் இசையாகப், பாடின் அருவிப் பனிநீர் இன்னிசைத் தோடமை முழவின் துதைகுரலாகக் கணக்கலை இகுக்கும் கடுங்குரல் தூம்பொடு மலைப் பூஞ்சாரல் வண்டு யாழாக. இன்பல் இமிழிசை கேட்டுக் கலி சிறந்து மந்தி நல்லளவ மருள்வன நோக்க, -அகநானூறு :92 ஆகுளி. உடுக்கை, குடமுழா, தடாரி, தண்ணுமை, துடி, தூம்பு, பதலை, பறை, பேரிகை, மத்தளம், முரசு, முழவு முதலாம் தோற் கருவிகளையும், குழல்,கொம்பு, கோடு முதவாம் துளைக் கருவிகளையும், சீறியாழ், பேரியாழ், மகரயாழ் முதலாம் நரம்புக் கருவிகளையும் கஞ்சதாளம், எல்லரி முதலாம் கஞ்சகக் கருவிகளையும் இசைக்கும் இசை வளத்தைத் தமிழர் பண்டே கற்றுத் தெளிந்திருந்தனர். பழந்தமிழர் காலத்தில், இசை பாடுவதை மட்டுமே தொழிலாகக் கொண்ட ஒரு தனி இனம் தமிழரிடையே இருந்து வந்தது. பாணர் என்ற பெயரால் அழைக்கப்பட்ட அம்மக்கள், வள்ளல்களையும், வேந்தர்களையும் கண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/55&oldid=888955" இலிருந்து மீள்விக்கப்பட்டது