பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 - வஞ்சி மூதூர் அவர்கள் தம் வெற்றிப் புகழ்களை வினங்கக் கூறும் பாக்களைப் பண்ணில் இயைத்துப் பாடிப் பரிசில் பெற்று வாழ்ந்து வந்தனர். அப்பாணர்கள் யாழ்வாசிப்பதில் வல்லவர்கள். யாழும், அது கொண்டிருக்கும் நரம்புகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறிய யாழ் என்றும், பெரிய யாழ் என்றும் அழைக்கப் பெற்றன. சிறிய யாழ் ஏழு நரம்பு, களைக் கொண்டது. இது செங்கோட்டு யாழ் என்றும் அழைக்கப் பெறும், பெரிய யாழ் இருபத்தொகு நரம்பு களை உடையது. சிறிய யாழ் வாசிப்பவர் சிறு பாணர் என்றும், பெரிய யாழ் வாசிப்பவர் பெரும்பாணர் என்றும் அழைக்கப் பெற்றனர். திருஞான சம்பந்தருடன் பண்பாடிய திருநீலகண்ட யாழ்ப்பாணரும், திருமால் அடியவரான திருப்பாணாழ் வாரும், திருவிளையாடல் புராணத்தால் அறியலாகும் பாணபத்திரரும்'அவ்விசைப் பாணர் குடியில் வந்த பெரியார் களாவர். நில வேறுபாட்டிற்கு ஏற்ப வேறுபடும் இசைகளையும், கால வேறுபாட்டிற்கு ஏற்ப வேறுபடும் இசைகளையும் உணர்ந்திருந்த தமிழர், அவ்விசை வேறுபாட்டினைப், பண் என்ற சொல்லால் குறித்தனர். அது, இக்காலம் இராகம் என அழைக்கப்படுகிறது, பண் என்ற சொல் திருவள்ளுவர் காலத்திலேயே பெரு லழக்கில் இருந்த பழமை வாய்ந்தது. "பண் என்னாம் பாடற்கு இயையு இன்றேல்' என்ற குறளைக் காண்க, பண் அறிந்த தமிழர், அப்பண்ணோடு இயைந்து பாடு தற்குத் துணை நிற்கும் பல இசை நூல்களையும்e அவ் விசைத் திறங்களை இனிதே விளக்கும் பல இசை இலக்கண நூல்களையும் பண்டே பெற்றிருந்தனர். இறையனார். அகப்பொருள் உரையாசிரியர் அறிமுகப்படுத்தும் பரிபாடல் முதுநாரை, முதுகுருகு, சிற்றிசை, பேரிசை முதலாம் நூல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/56&oldid=888957" இலிருந்து மீள்விக்கப்பட்டது