பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 59 களும், சிலப்பதிகாரத்திற்கு உரை கண்ட அடியார்க்கு நல்லார் அறிமுகப்படுத்தும் பெருநாரை, பெருங்குருகு, பஞ்சபாரதீயம். பஞ்ச மரபு, இசை நுணுக்கம், இந்திர காளியம் முதலாம் நூல்களும், சிலப்பதிகார அரும்பத உரை யாசிரியர் அறிமுகப்படுத்தும் பதினாறுபடலம் என்ற நூலும், யாப்பருங்கல விருத் தி உரையாசிரியர் அறிமுகப்படுத்தும் வாப்பியம் என்ற நூலும், யாப்பருங்கலக் காரிகை ஆசிரியர் அறிமுகப் படுத்தும் இசைத் தமிழ்ச் செய்யுள் துறைக் கோவை என்ற நூலும், தமிழகத்தில் பண்டு வழக்காற்றில் இருந்த இசை நூல்களாம். சிலப்பதிகாரத்தில் வரும் கானல்வரி, வேட்டுவ வரி, ஊர் சூழ்வரி முதலாம் வரிப் பாடல்களும், ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரலை முதலாம் குரவைப் பாடல்களும் இக்ைப்பாடல்களாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/57&oldid=888959" இலிருந்து மீள்விக்கப்பட்டது