பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. பாசணம் நிலம் வளம் பெற நீர் இன்றியமையாதது என்பதை உணர்ந்து, எண்ணற்ற ஏரிகளை அமைத்து மழை நீரைத் தேக்கியும், ஆறுகளின் குறுக்கே அணைகளை அமைத்துப் பெருக்கெடுத்து ஒடும் வெள்ளநீரை, வெட்டிய வாய்க் கால்கள் வழி ஏரிகளுக்குக் காண்டு சென்று தேக்கியும், ஏரிகளில் மதகுகள் அமைத்தும், கரைகள் உடைப்பெடுக் காவாறு காவல் அமைத்தும், காவலையும் கடந்து உடைப் பெடுத்தவழி உடைப்பு அடைத்தும், வெள்ளம் கொண்டு வந்து விடும் மண் மேடு அகற்றியும், செப்பம் செய்தும், நீர் வளம் காணும் பாசன முறைகளைத் தமிழகம் பண்டே கண்டிருந்தது என்பதைக் கல்வெட்டு அளிக்கும் செய்திகள் உறுதி செய்கின்றன. . . . மூன்றாம் குலோத்துங்கனுடைய இருபதாம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றும், இருபத்து நான்காம் ஆண்டுக்கல்வெட்டு என்றும். அருங்குன்றக்கிழான் நாற்பத்தெண்ணாயிரம் பிள்ளையும், தமக்கை மங்கையர்க்கரசியாரும் பஞ்ச காலத்தில் காசுக்கு உழக்கரசி விற்கக்கே, பூண்டபொன்னும் தேடின அர்த்தமும், நெல்லும் அடைய இட்டு, அண்ணர் நாட்டு எல்லையில் (திரு வண்ணாமலைக்கு அண்மையில்) திருந்திகையாற்றை அடைத்து, ஏரிவெட்டித் தும்பு அமைத்து, நிலம் திருத்திப்பயிர் செய்த நிகழ்ச்சியைக் குறிப் பிடுகின்றன. . - -கல்: தொகுதி 8 எண் 83 : 151

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/58&oldid=888961" இலிருந்து மீள்விக்கப்பட்டது