பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் - 61 செய்யாறு வட்டம், மாமண்டுருக்கு அணித்தாக உன்ள நரசமங்கலக் குன்றில், ஏரிக்கரையில் உள்ள ஒரு கல்மீது, சகம் 1550ல், சென்னப்ப நாய்க்கர் மகன் வெங்கடப்பநாய்க்கர், தன்தந்தை பெயரால் சென்னசாகரம் என்ற ஏரியைக்கட்டி, அதற்குப் பாலியாற்றிலிருந்து கால்வாய் வெட்டிய செய்தி தெலுங்கு மொழியிலும், தமிழ் மொழியிலும் வெட்டப்பட்டுள்ளது. -வ. ஆ. 243, 245, 246 இறந்தவர் நினைவாக, ஏரிகளில் மதகு அமைக்கும் முறை ஒன்றும் இருந்து வந்துள்ளது. போளுர்வட்டம், தச்சாம்பாடியிர் காணப்படும் கல்வெட்டொன்று, “பல் குன்றக் கோட்டத்துப் பாடாநாட்டு ஏரியில், உாடா நாட்டுத் தலைவன் ஐயாற்றடிகள் மகள், சேரிப்பெருமானார் மனைவியும், பூதனார் நம்பி எழுவனா ருடைய மகளுமான மஞ்சக்கணாள் இறந்தமையின் அவள் நினைவாக திருமலைப் பாடி என்ற மதகு கட்டின செய்தி பொறிக்கப்ட்டுள்ளது. - - - --கல். ஆண் ; 1531 1941-42 கட்டிய ஏரிகளுக்கு நீர் கொணர்வான் வேண்டி அணித் தாக ஓடும் ஆறுகளிலிருந்து கால்வாய்கள் வெட்டுவது. அவ்வாறு வெட்டப்பட்டு பண் டு தொட்டே ஓடிக் கொண் டிருக்கும் கால்வாய்களிலிருந்து, புதுக்கால்வாய் வெட்டிப் புதிய பாசனத்திற்கு வழி செய்வது, அவ்வாறு வெட்டப் படும் கால்வாய்களுக்காக நிலம் வாங்குவது ஆகிய நிகழ்ச்சி களும் பண்டே நிகழ்ந்துள்ளன. . . - வேலூர் வட்டம் திம்ம சமுத்திரம் ஏரிக்கரையில் உள்ள கல்வெட்டொன்று "பிருதிவி கங்கரையனும், அவன் மனைவி இலாடப் பெருந்தேவியும், தம்முடைய மகளான ஐயக் குட்டியின் தானமாகப் பாலாற்றிலிருந்து விழுப்பேரரையன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/59&oldid=888962" இலிருந்து மீள்விக்கப்பட்டது