பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 - வஞ்சி மூதூர் வாய்க்கால் என ஒரு வாய்க்காலை வெட்டி ஏரிக்கு நீர் வருவாய் செய்ததைக் கூறுகிறது. -கல். ஆண் : 174 1938-40 வந்தவாசி வட்டம் சீய மங்கலத்தில் காணப்படும் முதல் இராசராசனுடைய பத்தொன்பதாம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று, “காடுவெட்டுவித்துக் கட்டை பறித்து மேடு கல்விக், குழி துார்த்துக் கரம்பறுத்து வரம்பு அட்டித் திருத்தின செறுவுக்கு நீர்பாயப், பேரேரியினின்று வரும் அம்பலத்தாடி வாய்க்காலில் பிரித்து ஒரு வாய்க்கால் வெட்டி, அதற்கு, வெண்காட தேவ வாய்க்கால் எனப் பெயரிட்டதைக் கூறுகிறது. -கல், தொகுதி =7 எண்: 440 வாலாஜா فرانسه கணியனூரில் வெள்ளம்மை அகரத்து ஏரிக்குக் கால்வாய் ஒன்று வெட்ட நிலம் வாங்கிய செய்தியை ஒரு கல்வெட்டு உணர்த்துகிறது. 1940-41 /5 : هيي . يقة ويسـ . இவ்வாறு எடுக்கப்பட்ட ஏரிகள், பெருமழை காலங் களில் உடைப்பெடுத்து விடாதவாறு விழிப்பாக இருந்து காக்கவல்ல காவலர்களை நி ய மி ப் ப து ம் உண்டு. போளுர் வட்டம் அனந்தபுரம் ஏரி, அடிக்கடி உடைப் பெடுத்து வயல்களை அழிப்பது கண்டு, ஊரவர், விண்ணப் பிக்க, மண்டலேசுரரான தேவராய மகாராயர், வயிச்சி. யப்பன், பள்ளிப் பெருமாள் என்ற இருவரைக் காவலராக. நியமித்ததை, ஒரு கல்வெட்டு உணர்த்தியது. -கல்-ஆண் 707/1942-43 ஏரிக்கரையும், கலிங்கமும், மிதகும் பழுதுற்றுப் போகா வண்ணம், அவ்வப்போது மராமத்து செய்யப்பட வேண்டு:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/60&oldid=888965" இலிருந்து மீள்விக்கப்பட்டது