பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 63, வது இன்றியமையாதது. அரசு, அதை ஒரோவழி மறந்த வழி, பொதுமக்கள் முறையீடு செய்வதும், அதுகேட்டு அரசு அதைச் செய்வதும், மராமத்துச் செலவிற்காக எனச் சில நிலங்களை விட்டு, அவற்றின் வருவாய் கொண்டும், ஏரிக்கீழ் உள்ள நிலங்களுக்கு விதிக்கப்படும் வரி கொண்டும், அம்மராமத்துப் பணி செம்யப்படுவதும் கல்வெட்டுக்களால் தெளிவாக்கப்படுகின்றன. - போளுர் வட்டத்தில், சேயாற்றின் கரைக்கண் உள்ள ஆத்தூரைச் சேர்ந்த ஊரவர் முறையிட, அந்நாளில் ஆட்சி நடத்திய வீரயொக்கண்ண உடையார், கி.பி. 1370ல் ஏரி பழுது பார்த்தற்கென தனி ஏற்பாடு செய்துள்ளார். -கல்-ஆண் : 141/1941-42 குடியாத்தம் வட்டம், ஒட்டத்தாங்கல் ஊரவர், முதல் பராந்தகன் காலத்தில், ஏரிப்பட்ட என்ற பெயரால், நிலம் விட்டு, அந்நிலங்களின் வருவாய் கொண்டு, ஏரிக்குக் கரை யமைத்தல், துரர் எடுத்தல் ஆகியன செய்ய விதி வகுத்தனர். -கல்-ஆண் : 206/1927 திருத்தணி வட்டம், தரணிவராகபுரம் ஊரில் காணப் படும் கல்வெட்டு ஒன்று, நாராயணவரம் கீர்மையைச் சேர்ந்த சிறுத்தணி கீர்மையை ஆளும் பங்காரு நாயக்கர், சிறுத்தணி ஏரி பராமரிப்புக்காக அதன் கீழுள்ள நிலங் களுக்கு வரி விதித்த நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறது. – ક્રો-ઇજિં. : 112/1942-43” ஏரியை மராமத்து செய்ய நிலவரி மட்டுமே அல்லாமல், ஏரிக்கரை மரங்கள். ஏரி மீன் ஆகியவற்றின் வருவாயும் பயன்படுத்தப்பட்டது. - . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/61&oldid=888966" இலிருந்து மீள்விக்கப்பட்டது