பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64. வஞ்சி முதுரர் கி. பி. 17ஆம் நூற்றாண்டில் விசயநகர வேந்தரான வேங்கடபதி மகாராயர் காலத் கில் போளூர் வட்டம், ஒதலவாடி ஏரிக்கரையில் உள்ள வேல மரங்கள், ஏரி மீன் ஆகியவற்றின் வருவாயைக் கொண்டு ஏரியைச் செம்மைப் படுத்திக்கொள்ளுமாறு. திம்ம நாயக்கரையன் காரிய கருத்தனார் பள்ளி முகுந்தரெட்டி உத்திரவு செய்துள்ள நிகழ்ச்சியை ஒரு கல்வெட்டு கூறுகிறது -கல் ஆண் 142|1941-42 வீரப்பிரதாப சக்கரவர்த்தி. வீரபோசள, வீர ராமநாத தேவர் மகாப்பிரதானி, கொப்பைய தண்ணாயக்கர் என்பார், ஆரணி வட்டம் விண்ணமங்கலமான, விக்கிரம சோழச் சதுர்வேதி மங்கலத்து ஏரியில் மீன் விற்ற பொன்னை கொண்டு ஆண்டுதோறும் ஏரியை ஆழப்படுத்தல் வேண்டும் எனக் கல்வெட்டு நட்டுக்கொடுத்த நிகழ்ச்சி, ஒரு கல்வெட்டில் காணப்படுகிறது. -கல்-தொகை-6 : எண் : 459 மராமத்துப் பணிகள், ஆண்டு தோறும் மேற்கொள்ளப் பட்டாலும், ஆற்று வெள்ளம் பாய்வதால் கால்வாய்களும், ஏரிகள் உடைப்பெடுத்துக் கொள்வதால் விளை நிலங் களும் மண்மேடிட்டுப் போகும்போதும், அரசும் தனியார் களும் மண் அகற்றிச் செப்பம் செய்து தருவதும் ஆகிய நிகழ்ச்சிகளும் பண்டுதொட்டே நடைபெற்று வந்துள்ளன. ஒரு காலத்தில் பாலியாற்றில் வெள்ளம் பெருகி வந்த போது, வேப்பூர் பகுதிக்குச் செல்லும் வாய்க்கால் மணல் நிறைந்து தூர்ந்துபோகவே, விட்டப்பர் என்ற செல்வர் பெரும் பொருட்செலவில், மணல் அகற்றிச் செம்மைப்படுத்தி ஏரியையும் ஆழப்படுத்தினராக, அவருக்கு இறைவன் திருவருள் பெருக வேண்டி, லிரிஞ்சீபுரம் வழித்துணை நாயனார் கோயில் பண்டாரத்தார் கூடி, மூன்று நுந்தா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/62&oldid=888968" இலிருந்து மீள்விக்கப்பட்டது