பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 வஞ்சி மூதூர் மூன்றாம் இராசராசனின் இருபதாம் ஆண்டுக் கல்வெட்டொன்று, அருங்குன்றம் கிழான் நாற்பத்தெண்னா யிரம் பிள்ளையும், தமக்கை மங்கையர்க்கரசியாரும், அண்ணாநாட்டு எல்லையில் ஆற்றை அடைத்து, ஏரி வெட்டத்தும்பு அமைத்துச் சீ. மாகேசுரநல்லுர் என்று பெயரிட்டுச் சிறிது நிலம் திருத்தி எல்லைவரம்பிட்டுப்பயிர் கெய்து வரும் நிலையில், மங்கையர்க்கரசியார் இறந்துபோக நாற்பத்தெண்ணாயிரம் பிள்ளை தளர்ச்சி எய்தினார். ஏரியும் உடைந்தது ஆற்றில் அணையும் உடைந்துபோயிற்று அப்பகுதி நெடுநாள் பாழ்பட்டுக் கிடந்தது. அவர்களால் ஒன்றும் செயற்படாமல் போகவே அவர்கள், மருமகனான காங்கேயர் மகள், தொண்டை. மான் நாச்சியார், ஏரியை அடைத்து, ஆற்றணையைச் செம்மை செய்து தரக்கடவளாக அவளும் அது செய்ய மாட்டாளாயினள். வேந்தனது பத்தொன்பதாம் ஆண்டில், நாற்பத்தெண்ணாயிரம் பிள்ளையின் மக்கள், குன்றம் பல்லவசையனும் கம்பன் நாற்பத்தெண்ணாயிரம் பிள்ளை யும், மற்றும் அவர்களை உள்ளிட்டாரும் தம்மிற்கூடி, எங்களால் ஆறும் அடைத்து, ஏரியில் மடைகளும் அடைத்து கலிங்கும் இடமுடியாது. நீங்கள் உங்கள் பொருளை இட்டு, இவ்வேரி மடைகளும் ஆறும் அடைத்துக்கலிங்கும் இட்டு, நாங்கள் முன்பு செய்ததற்கு, எல்லைக்கொல்லை காடு கழனியில் மூன்றில் ஒன்று எங்களுக்கு விட்டு, இருகூறு நீங்கள் அனுபவியுங்கள் என வேறு சிலர்க்கு எழுதித்தந்து இசைவு தீட்டிக்கல்லில் வெட்டித்தந்த நிகழ்ச்சியைக் குறிப் பிடுகிறது. - -கல். தொ. 8: எண்:83. விளை நிலங்கள் வெள்ளத்தால் பாழுறுவதும், பெரும் பொருள் செலவிட்டு அதைச்செம்மைப் படுத்துவதும் அடுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/64&oldid=888972" இலிருந்து மீள்விக்கப்பட்டது