பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார். 67 தடுத்து நிகழ்வதால், நிலத்தை மேலும் செம்மைப்படுத்த, இயலாத நிலையில், அந்நிலங்களை விற்றுவிடுவதும் உண்டு. சகம் 130ல், திருப்பனங்காட்டு ஏரி உடைப்பெடுத்துக் கொண்டமையாலும், அதன்கீழ் நிலங்கள் பல்லாண்டு களாய்ப் பயிரேறாமையாலும், ஏரியைச் செம்மை செய் வதற்கு வேண்டும் பொருள் இல்லாமையாலும், கோயில் தானத்தார் கில நிலங்களை விற்ற வரலாற்றை ஒரு கல்வெட்டு கூறுகிறது. -வ. ஆ. 265 ஒரு ஆற்றில் இன்ன இடத்தில் அணைகட்டலாம்: இன்ன இடத்தில் அணைகட்டக்கூடாது; இந்தக்கால்வாய், இந்த ஊர் ஏரி நிறைந்த பின்னரே, இந்த ஏரிக்குச்செல்ல வேண்டும்; இந்தக்கால்வாய், இந்த ஊருக்கு இத்தனை நாட்களுக்கு ஒரு முறையே நீர்பாய வேண்டும் என்பன போலும் பாசன விதிமுறைகளும் பண்டுதொட்டே இருந்து வந்துள்ளன. அரியப்பன் காலில், சம்புவராயனல்லுரர் எல்லைக்குள் அணையிடலாகாது என ஒரு கல்வெட்டும்; செழிய தரையன்பட்டு ஏரியிலிருந்து புதிதாக வெட்டப்பட்டுவரும் கால்வாய் அவ்வூர்ப்பாசனத்துக்குப் பாய்ந்தபின், காமக்க நல்லூர் ஏரியில்விடப்பட்டுச் சம்புவராயநல்லூருக்குப்போக வேண்டும் என ஒரு கல்வெட்டும்; காமக்கநல்லூர் ஏரியில் அரியப்பன்காலில் எட்டு நாளைக்கு ஒரு நாள் தண்ணீர் விடப்படவேண்டும் என ஒரு கல்வெட்டும் கூறுகின்றன. -கல்ஆண் 101, 102, 103|1940-41 வெள்ளம் பாய்ந்து பாழ்பட்டுப்போகும் விளைநிலங்களுக்கு வரிவிலக்கு அளிப்பதும் உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/65&oldid=888974" இலிருந்து மீள்விக்கப்பட்டது