பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. தாமரையும் தும்பியும் அமைதி நிலவிய ஒரு நாட்டில், மக்கள் மகிழ்ந்து வாழ்ந் திருந்தனர். ஒரு நாள் பகையரசன் படையொன்று அந் தாட்டில் திடுமெனப் புகுந்து பாழ் செய்யத் தொடங்கி விட்டது. அந்நாட்டில், நல்வாழ்வு வாழ்தல் இனி இயலாது எனக் கருதிய அந்நாட்டுக் குடிமக்களில் சிலர், அந்நாட்டை விட்டகன்று, நல்லாட்சி நிலவுவதாகக் கருதிய வேறு ஒரு நாட்டைத் தேடி அடைந்து ஆங்கு வாழ்வு மேற்கொண்டு விட்டனர். நாட்கள் சில கழிந்தன. அழிந்த நாட்டிற்கு உரிய அரசன், தன்னை விட்டு அகலாதிருந்த படை துணையால் பகைவரை வென்று ஒட்டி விட்டான். நாட்டில் மீண்டும் நல்லாட்சி மலர்ந்தது. அது அறிந்த, ஒடிய குடிமக்கள், மீண்டும் அந்நாடடைந்து வாழ்வு ம்ேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியை நினைவூட்டும் இயற்கைக்காட்சி ஒன்று. ஒர் ஊரில் ஒரு குளம். குளம் நிறைய மலர்ந்திருந்த தாமரை மலர்களில், தும்பிகள் தத்தம் பெடைகளோடு தேன் உண்டு மகிழ்ந்து வாழ்ந்திருந்தன. ஒரு நாள், அக்குளக்கரையை உடைத்து விட்டு வெள்ளம் உட்புகுந்து விட்டது: தாமரை மலர்கள் எல்லாம் தண்ணிருள் மறைந்து விட்டன. அதனால், அங்கு வாழ்வதற்கு இனி இயலாது என அறிந்த அத்தும்பி களுள் சில, அக்குளத்தை விட்டு நீங்கி, அதை அடுத்திருந்த நீர் நிறைந்த வேறு குளத்தைத் தேடிச் சென்று, அதில் உள்ள தாமரை மலர்த்தேனை உண்ணத் தொடங்கி விட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/68&oldid=888980" இலிருந்து மீள்விக்கப்பட்டது