பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 வஞ்சி முதுரர் இதற்கிடையில், முன் கூறிய குளத்திற்கு உரியவன், உடைப்பையும் அடைத்து, அதிக நீரையும் அகற்றிவிடவே, தாமரை மீண்டும் மலர்விடத் தொடங்கி விட்டது. அது அறிந்த ஒடிப்போன தும்பிகள் மீண்டும் இக்குளத்திற்கே வந்து தாமரை மலர்களில் தேன் உண்ணத் தொடங்கி விட்டன. - இவ்வினிய காட்சி அளிக்கும் கலித்தொகைப் பாடல் இதோ: - - "பன்மலர்ப் பழனத்த பாசடைத் தாமரை, . . . . இன்மலர் இமிர்பு ஊதும் துணைபுணர் இருந்தும்பி, உண்துறை உடைந்த பூப்புனல் காய்ப்பப் புலந்து ஊடி, பண்புடை நன்நாட்டுப் பகை தலை வந்தென, அதுகைவிட்டு அகன்று ஒரீஇக், காக்கிற்பான் - குடைநிழல் மதிபடர்ந்து இளவு கொள்ளும் குடிபோலப் பிறிதும் ஒரு பொய்கை தேர்ந்து அலமரும்பொழுதினாள்: மொய்தப இறை பகை தணிப்ப, அக்குடிபதிப் பெயர்ந்தாங்கு, நிறை புனல் நீங்க, வந்து, அத்தும்பி, அம்மலர்ப் பறை தவிர்பு அசைவிடு உம் பாய் புனல்” --மருதக்கலி ; 13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/69&oldid=888982" இலிருந்து மீள்விக்கப்பட்டது