பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. ஆநாண் விடையும், துணை புணர் ஏறும் ஆனிரையில் ஆக்களும் ஆனேறுகளும் கலந்தே இருக்கும் என்றாலும், அந்நிரையுள், ஆனேறுகளுள் தலைமையுடைய தாக ஆனேறு ஒன்றே காணப்படும். அது அந்நிரையில் உள்ள ஏனைய ஆணேறுகள் அனைத்தும் தனக்கு அடங்கியதாகவே இருக்க வேண்டும், தன்னைக் காணவும் அணுகவும் அஞ்சி நடுங்குவனவாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதும், அதற்கு மாறாக, தன்னிலும் மிக்கதாகவோ, அல்லது தனக்கு நிகருடைய தாகவோ ஏதேனும் ஒரு ஏறு நடந்து கொள்ளக் காணின் பொறுக்காது, அதோடு மோதி அதனை அழித்து விட்டு அவ்வெற்றிக் களிப்பில் கோடு நிமிர்ந்து முகம் மாந்து உலா வருவதும் அதன் இயல்பாகும், ‘. . அந்நிரையுள் ஆக்கள் எண்ணிலாதன இடம் பெற்றிருந் தாலும், அவற்றோடு பிறந்த நாள் தொட்டே பழகிவிட் தனால், அவற்றின் எதன் மீதும் அதற்குக் காதல் உணர்வு பொதுவாக எழுவதில்லை. அதற்கு மாறாக, அது போகும் இடத்தில், அந்நிரையில் சேராத புதிய ஆ ஒன்று வரக்கண்டு விட்டால், அவ்வளவே அதன் மீது அதற்குப் பெருங்காதல் உண்டாகி விடும். - - காதல் உணர்வு என்பதினும், காதல் வெறி என்றே அதைக் கூற வேண்டும்; தன் நிரையை மறந்து விடும். நிரையை விட்டு வெளியேறி அதன்பின் தொடர்ந்து விடும். அது செல்லுமிடமெல்லாம் அதன் நிழல் போல் தொடர்ந்து வஞ்-5 . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/70&oldid=888986" இலிருந்து மீள்விக்கப்பட்டது