பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 வஞ்சி மூதா செல்லும். அதன் விளைவால், ஆவும் ஆனேறும் ஒன்றுபட்டு விட்டால், அதன் பின்னர், அதை, அந்த ஆவினின்றும். பிரித்து விரட்டித் துரத்துவது எவர்க்கும் இயலாது. ஆ. அண்டையில் உள்ள வேற்றுார் ஆயின், அவ்வேற்றுார்க்கே குடிபோய்விடும்; ஏன், அதன் மனைக்கே கூடச் சென்றுவிடும்: இது கொல்லேற்றின் இயல்பு. - தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லா உயர்நிலை பெற்றுச் செம்மாத்திருந்தபோது, வேட்டை முன்னிட்டுக் காட்டுக்குச் சென்றவிடத்தே, புதியவள் ஒருத்தியைக் கண்ணுற்று அவள் வயத்தனாகி. அவள் பின் சென்று கிடந்து, அவள் காதலைப் பெற்றுவிட்ட நிலையில், அவளை, அவன் மனைவரையும் விடாதே சென்று திரும்பும் இளையோன் ஒருவன் செயலை விளக்க, குறிஞ்சிப் புலவர் கபிலர் அவர்கள், அவனுக்கு உவமையாகக் கொல்லேற்றி னைக் கூறியுள்ள நயம்,எண்ணுந்தொறும் எண்ணுந்தொறும் இனிக்கிறது: - "மாறு பொருது ஒட்டிய புகல்வின் வேறுபுலத்து ஆகாண் விடையின் அணிபெற வந்து" 135–136. "துணை புணர் ஏற்றின் எம்மொடு வந்து துஞ்சா முழவின் மூதூர் வாயில் உண்துறை நிறுத்துப் பெயர்ந்தனன்" 235-237 முதல் சந்திப்பின் போது, வெறும் காட்சிக்கு மட்டுமே இடமாதலின், க | ண் ப ைத மட்டும் அடையாக்கி 'காண்பிடை” என்றும், இருவர் உள்ளமும் ஒன்று கலந்து, விட்டநிலையில் புண்ர்ச்சியும் இடம் பெற்றுவிட்டதனால் புணர்ச்சியை அடையாக்கி "புணர் ஏறு’ என்றும் சொல்லாட்சி புரிந்து நம்மைச் சொக்கவைத்துள்ளார் . புலவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/71&oldid=888988" இலிருந்து மீள்விக்கப்பட்டது