பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. வாடும் மஞ்சையும் ஆடும் தோகையும் அச்சத்திற்கு ஆட்பட்டு விட்ட நிலையில், அறிவு செயல் இழந்துபோக, அவ்வச்சம் ஆட்டியபடியெல்லாம் ஆடத் தலைப்பட்டு விடுதல் அனைவர்க்கும் இயல்பு. தினைப் புனத்துள் புகுந்து தினையைப் பசியாறத் தின்று தீர்க்கலாம் என்ற பசி வேட்கையோடு புனத்துள் புகுந்த காலை, கானவர் ஊர் கூடிவந்து பறையொலி எழுப்பியும், அம்புகள் ஏவியும் துரத்த, உண்பதும் கெட்டு ஊறுபடவும் நேர்ந்தமை, யால் கொண்ட கடுஞ் சினத்தை, எதிர்ப்படும் எதுவாயினும் அதன்மீது போக்கி வஞ்சம்தீர்த்துக் கொள்ளும் வெறி கொண்டு விரைத்து பாயும் வேழத்தின்முன் எதிர்ப்பட்டு விட்டாள் ஓர் இள நங்கை, - - அச்சத்திற்கு ஆளாகிவிட்ட அவள், அந்நிலையில் அக்களிற்றினைத் துரத்தித் தன்னைக் காக்க வல்லவன் ஆங்கு எதிர்ப்பட்ட ஓர் இளைஞனைத் தவிர்த்து வேறு எவரும் இல்லை என்ற நிலை ஏற்பட்ட போதும், தன்னைக் காத்துக் கொள்ளவும் அயலான் ஒர் இளைஞன் பால் அடைக்கலம் புகுவது கூடாதே என்ற அறிவு செறிவு வழி செயல்பட மாட்டாது, அடிமை கொண்டுவிட்ட அவ்வச்ச உணர்வு ஆட்டியவாறே செயல்பட்ட நிகழ்ச்சிக்குத்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/72&oldid=888990" இலிருந்து மீள்விக்கப்பட்டது