பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. காதலும் கடமையும் ஒருவனும், ஒருத்தியும்; அவர் மக்களும் ஒன்றுகூடி வாழும் வாழ்வே ஒரு குடியாம். அத்தகைய குடி பல சேரின் ஒர் ஊராம். ஊர்கள் பலவற்றைத் தன்னகத்துக் கொண்டதே ஒரு நாடாம். ஆகவே ஒரு நாட்டின் வாழ்வு, அந்நாட்டு மக்களின் வாழ்விற்கேற்ப அமையும். மக்கள் வாழ்வு வளம் செறிந்து அமைதி பெற்ற நல்வாழ்வாயின், அந் நாட்டு நிலையும் நன்றாம். மக்கள் வறுமையால் வாடி, அதன் காரணமாய் வழுக்கி வீழ்ந்த வாழ்வினராயின் அந்நாடும் வாழ்விழந்து போகும். 'அரசனும் இல்வாழ்வார் இல் வழி இல்' என நான் மணிக்கடிகை கூறுவது காண்க. தன் நாட்டு மக்கள் நல்வாழ்விற்காம், பொருளிற்குப் பிற நாடுகளை எதிர்நோக்காத நாடே சிறந்த நாடு. அத் தகைய வளம் செறிந்த நாட்டில் வாழ்வார், அவ் வளம் பெருக வழி செய்யும் தம் அரசும், அவ்வரசை அளிக்கும் அரசனும் அழியாது வாழ விரும்புவர். அவர்க்குக் கேடுண்டாம் என்று அறியின், அவரை இழந்து வாழ்வதினும் அழிந்து மறைவதே மாண்புடையதாம் என்ற உள்ள முடையராக் களம் புகுவர். அவ்வெண்ணம் உடையார் தம் உள்ள உரனை அழிக்கும் ஆற்றல், உலகில் எத்துணைச் சிறந்த படையாளர்க்கும் இல்லை. ... பழந்தமிழ் நாடு, பண்டு பாரெல்லாம் போற்றும் பெரு வாழ்வு பெற்றுத் திகழ்ந்தது என்றால், அதற்குக் காரணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/75&oldid=888996" இலிருந்து மீள்விக்கப்பட்டது