பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 - வஞ்சி மூதூர் அந்நாட்டில், அன்று குடிவாழ்ந்த ஒவ்வொருவரும் தத்தம் கடனறிந்து வாழ்ந்தமையேயாகும்’மக்களைப் பெற்று, அவர் உடலுக்கு உரம் ஊட்டி ஒம்புதல் தன் கடனாம் என உணர்ந் திருந்தாள் தாய். அம்மக்களுக்கு அறிவும் ஒழுக்கமும் ஊட்டி, உயர்த்தோராக்குதல் தன் கடன் என்பதை உணர்த் திருந்தான் தந்தை. அம் மக்கள் அறநெறி நிற்கும் ஆன்றோ ராய் வளர்தற்குத் தன் நல்லாட்சியே காரணமாம் என அறிந்திருந்தான் அரசன். தாயும், தந்தையும், தம் நாட்டு அரசனும் தத்தம் கடமையில் தவறாது நின்று வளர்த்த தாங்கள், அவர் கனவு நினைவாகுமாறு, போரில் புறங் கொடாது, வேழங்களை வெட்டி வீழ்த்தி வெற்றி பெறுதல் முதலாம் தொண்டுகளில் தவறாமை தம் கடனாம் என்று அறிந்திருந்தனர் அம்மக்கன்; அம்மக்கள், நாடு காவல் முதலாம் அவர் கடமைகளைக் குறைவற முடித்து வெற்றி பெறுதற்கு வேண்டும் வேல்படை முதலாம் வகை வகையான படைக்கலங்களை படைத் தளித்துத் துணை புரிதல் தம் கடமையாம் என்று அறிந்திருந் தனர், கொல்லன் போலும் அந்நாட்டுத் தொழில் புரி மக்கள், 'ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே: வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே: நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே: , ஒளிறுவாள். அரும்சமம் முருக்கிக் களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.” இவ்வாறு, ஒவ்வொருவரும் தம் தம் கடமையுணர்ந்து வாழ்ந்தமையால், அவர்களிடையே பகை தோன்றவில்லை, ஒற்றுமை வளர்ந்தது. அனைவரும் அன்பால் கட்டுண்டு கிடந்தனர். ஒன்று கூடி வாழ்ந்தமையால் அவர் குடிநிலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/76&oldid=888998" இலிருந்து மீள்விக்கப்பட்டது