பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோலிந்தனார் 81 உயர்ந்தது. குடிநிலை உயரவே கோன் நிலையும் உயர்ந்தது. தமிழ்நாடு, உலக நாடுகள் அனைத்திலும் உயர்ந்து விளங்கிற்று. இவ்வாறு தம் நாட்டை உலக மன்றத்தின் உயர்ந்த அரியணையில் இருக்கச் செய்தவர் கணவனும் மனைவியுமாய் கூடி வாழ்ந்தோரே யாதலின், அறிவும், ஒழுக்கமும், காதலும் கடமையும் குன்றா அவர் வாழ்க்கை வனப்பினை அறிந்து பயன் கொள்வோமாக. ஒருவனும் ஒருத்தியும் உள்ளம் கலந்து ஒன்றுபட்டு வாழும் இல்வாழ்க்கை, காதற்பண்பு வாய்ந்து விளங்குதல் வேண்டும். அவ்வாழ்க்கை காதல் மயமாய்க் காட்சி அளித்தல் லேண்டும். வாழ்க்கை வேறு, காதல் வேறு என்ற வுேறுபட்ட நிலை ஆங்கு இடம் பெறுதல் கூடாது. அவர் காதல் வாழ்வில் கடமையுணர்வு கருக்கொள்ளா - தாயின், அக்காதல் பயனற்றுப்போம். காதல், அவர் வாழ்வின் பண்பாயின், கடமை அதன் பயனாதல் வேண்டும்; 'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது’ t என விதி வகுக்கும் வள்ளுவர் வாய்மொழியும் காண்க. ஒர் ஆணும் ஒரு பெண்ணும் தனித்தனியே நின்று ஆற்றும் கடமைகளால் உலகம், கருதிய பயனைப் பெற்று விடாது; அவர் இருவரும் கணவனும் மனைவியுமாய்க் கலந்து, ஒருவர்க்கு ஒருவர் துணையாய் நின்று கடனாற்றும் பொழுதே, உலகம் நிறை பயன் பெறும். இவ்வுண்மையை உணர்ந்தே, உலகியல், ஒருவனும் ஒருத்தியும் ஒன்று கூடி வாழும் காதலை உருவாக்கி அளித்துள்ளது. ஆகவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/77&oldid=889000" இலிருந்து மீள்விக்கப்பட்டது