பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 வஞ்சி மூதுாரி கடமையை வளர்க்கக் காதல் வேண்டும்; காதல் கடமையை வனர்க்கும் விழுத்துணையாய் வாழ்தல் வேண்டும். கடமைக்குக் காதலே அன்றி காதலுக்குக் கடமை அன்று: கடமையை மறந்த காதல் காதலாகாது. காதல் கடமையை வளர்க்க வேண்டுமேயல்லாது, அக்கடமையுணர்வை அழிப்ப தாதல் கூடாது, எனக்காக நான் வாழ என்பதினும். என் காதலைக் கொள்ளை கொண்ட இவருக்காக, இவர் இன்புற்று வாழ நான் கடமையாற்றுதல் வேண்டும் என்ற விருப்பம் ஒருவர் உள்ளத்தில் இடம் பெற்ற வழி. அவர் ஆற்றும் கடமையே நிறைந்த பயன் தரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/78&oldid=889002" இலிருந்து மீள்விக்கப்பட்டது