பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 - வஞ்சி மூதுார் காழ்ப்புணர்வு கொண்டு பிறர் மீது யோரிட்டு எழ வேண்டிய நிலை, பழந்தமிழர்க்கு உண்டாகலில்லை. மாறாக தாம் பெற்றிருந்த வளமார் பெருவாழ்வு பெற்றி ராத பிறர், தம் வளம் கண்டு கொண்ட காழ்ப்புணர்வு காரணமாகத் தம்மீது போர் தொடுத்து வந்த காலை, அவ்வாறு வந்தாரை வென்று ஒட்டுவதற்கே அவர்கள் போர் மேற் கொள்ள வேண்டியிருந்தது. ஆகப் பழந்தமிழர் கொண்ட போரெல்லாம் நின்று தாக்கிய போரே அல்லது சென்று தாக்கிய போர் அன்று. நன்செய் போலும் வயல் வளம் மிகுந்த நாடுகளில் வாழப் பெற்ற மக்கள், வற்றாப் பேரின்ப வாழ்வுடைய ராயினர்; களர் நிலமும், கல் நிலமும் போலும் நாடுகளில் வாழப் பெற்றவர், வறுமையிற் கிடந்து உழன்று வாழ்வின் பயன் பெறாராயினர். வளமும் வறுமையும், இவ்வாறு, வாழும் நிலத்தின் வளம், வளமின்மைகளுக்கு ஏற்ப அமைந்ததாகவும், அந்நிலையைத் தம் உழைப்பால் மாற்றி அமைக்கலாம் என்ற உணர்வோ, அது அவரவர் வாழும் நில இயல்பிற்கேற்ப வந்து வாய்த்துள்ளது; அது அவரவர்க்கு கிடைத்ததை அவரவர் நுகர்வதே நில இயல்பு போலும் என எண்ணி அடங்கும் உள்ள நிறைவோ, மக்களுக்கு உண்டாகவில்லை. அதனால், வறுமையில் கிடந்து வாழ்வின் பயன் காணாத மக்கள், வளம் கொழிக்கும் நிலத்தாரின் நிறைவைக் காணுந்தோறும் காழ்ப்புணர்வு மிகுந்தனர்; அப்பெரு வாழ்வு தமக்கும் வேண்டும் என ஆசை கொண்டது அவர் உள்ளம். அவ்வாசையை நிறைவேற்றிக் கொள்ள எதற்கும் துணிந்து நின்றார்கள் அம்மக்கள்; ஆனால், தாம் பெற்ற அவ்வின்ப வாழ்வை, அவர்க்குப் பகிர்த்தளிக்கும் விரித்த உள்ளம் மேனிலை மக்களுக்கு உண்டாகவில்லை, அப் பேரின்ப வாழ்வு, இயற்கை, தமக்கு மட்டுமே வரைந்து வழங்கியுள்ளது என்று எண்ணினார்கள். அதனால், அவ்விரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/80&oldid=889008" இலிருந்து மீள்விக்கப்பட்டது