பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 85 திறத்தார்க்குமிடையே மனவேறுபாடு இடங்கொண்டது, அவ்வாறு தொடக்கத்தில் தளிர்விட்ட அம் மனவேறுபாடு. பின்னர்ப் பகையாகவும் அதன் பயனாம் போராகவும் உருவுக் கொண்டு உலக அமைதியை உருக்குலைக்கத் தோடங்கியது, w பகுத்துணரும் அறிவாற்றலை சிறிது முன்னர்ப் பெற்ற ஒருவன் அவ்வறிவு பெறும் வாய்ப்பின்றித் தன்னோடு வாழும் பிறரும், அதைப் பெற வேண்டும், அவர் அவ்வறிவு பெறத், தான் துணை புரிதல் வேண்டும் என்று எண்ணாமல், அவர்கள் அறிவின்மையைப் பயன் கொண்டு, அவர்களை ஏமாற்றிப் பிழைக்க எண்ணிய காரணத்தால், அவ்வாறு எண்ணிய காலத்தில் உருப்பெற்றது போர். இயற்கையிலேயே, சிறிது மிக்க வலிவு பெற்ற ஒருவன், வலிவு குறைந்து தன்னோடு வாழும் பிறரைப் பாதுகாத்தல் தன் கடன் என்று கொள்வதற்கு மாறாக, அவர் தம் வலி வற்ற நிலையையும், தன் வன்மையையும் பயன் கொண்டு அம்மிகப் பலரை அத்தனியொருவன் ஆட்டிப் படைக்கத் தொடங்கிய அத்தொல்லூழிக் காலத்தில் தோற்றம் கொண்டது இப்போர். - வாழ்வின் மேட்டிலே இருக்கும் ஒருவன் அதன் பள்ளத் தில் இருப்போனும், தன்னோடு மேனிலைக்கு வருவானாக என்ற நல்லெண்ணம் கொண்டு கை கொடுத்துத் தூக்கி விடு வதற்கு பதிலாக, அவன் மீது கல்லையும், மண்ணையும் வீசி, அப்பள்ளத்திலேயே அவனுக்கும் கல்லறை காணத் தொடங்கிய காரணத்தால், அக்காலத்தில் தோன்றிற்று இப் GLIrrtř. - போர், விரும்பத் தகாத ஒன்று. வேண்டாததும் கூட என்றாலும், போர் நிகழாத நாடு உண்டா? இல்லை, அது நிகழாத காலத்தைக் காண முடியுமா? இயலாது. போர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/81&oldid=889010" இலிருந்து மீள்விக்கப்பட்டது