பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 - வஞ்சி மூதூர் புரியாத உயிரினம் ன்துவேனும் உண்டா? இல்லை! பணி தவழும் உலகின் கோடியிலும் போர்; இருள் தவழும் பெருங் காட்டு நிலமாம் உலகின் இடைப்பகுதியிலும் போர் உலகம் தோன்றிய நாள் தொட்டு, போர் தொடர்ந்தே வருகிறது. காட்டுக் கொடு விலங்கினங்களும் போர் புரிகின்றன; நாட்டில் வாழும் நாகரிக நெறி கற்ற மக்கள் இனமும் போர் புரிகின்றனர். - இன்று நாம் காணும் இவ்வுலகமே மக்கள் இனம், மற்ற இனங்களோடும் இயற்கையோடும் ஒயாது நடத்திய போராட்டத்தின் உறுபயன் ஆகும். காய் கனி தின்று, காட்டாற்று நீர் குடித்து வாழ்ந்த மக்கள் இனம், சுவை ஆறே என்றாலும் ஆயிரம் ஆயிரம் வகையாக ஆக்கி உண் கிறது இன்று. அதற்கு, அது மேற்கொண்ட போராட்டம் எத்தனை எத்தனையோ? - மலையிலும், மலைக் குகையிலும், மரங்களின் செறிவிலும். மறைந்து வாழ்ந்த மக்களினம், பனியின் குளிரும், வெயிலின் வெப்பமும் தன்னை அணுகாதவாறு வாய்ப்புப் பல கொண்ட மாடி வீடு கட்டி மகிழ்ந்து வாழ் கிறது இன்று. இவ்வுயர் நிலை பெற இம்மக்களினம் மேற் கொண்ட போராட்டம் ஒன்றா? இரண்டா? ஆயிரம்! ஆயிரம்! - o, மானின் தோலும், மரத்தின் இலையும் கொண்டு, தன் மேனியை மறைத்து, மானத்தைக் காத்துக் கொண்ட மக்களினம், பட்டாலும், மயிராலும், பருத்தி நூலாலும் ஆன கொட்டைக் கரையபட்டு உடைகளையும், கால் உறை, மெய்யுறை முதலாம் சட்டைகளையும் அணியக் கற்றுக் கொண்டுளது இன்று. எத்தனை எத்தனைப் போராட்டங் களுக்குப் பின்னர்க் கிடைத்த பலன் இது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/82&oldid=889012" இலிருந்து மீள்விக்கப்பட்டது